கோபத்தில் கொந்தளித்த தமிழக பெண்கள் … முதல்வருக்கே இந்த நிலைமையா.? என்னடா இது திமுகவுக்கு வந்த சோதனை….

0
Follow on Google News

நாடளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கையில், தமிழக முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள், இதில் தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது, இது திராவிட மண், பெரியார் மண் என சவால் விடுத்து கொண்டிருந்த திமுகவுக்கு, என்னடா இது திமுகவுக்கு வந்த சோதனை என பரிதாபபடும் விதத்தில் தமிழக மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ள எழுச்சியும், எதிர்ப்பும், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கோபத்தை வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள், அல்லது ஒட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவார்கள், ஆனால், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்வர், அமைச்சர் என யாரும் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு மக்கள் எதிர்த்து கேள்வி கேட்டு வருவது, குறிப்பாக பெண்கள் கேள்வி கேட்டு வருவது, தமிழக மக்கள் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் அளவுக்கு துணித்து விட்டார்கள், இனி மக்களை ஏமாற்ற முடியாது என்கிற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது செங்கலை தூக்கி பிரச்சாரம் செய்தது போன்று இந்த முறை செங்கலை தூக்கி பிரச்சாரம் செய்ய முயன்றார், ஆனால் அது மக்கள் மத்தியில் ஈடுபட வில்லை, மத்திய பாஜக அரசு எங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு கொடுத்துள்ளது, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது.

சும்மா மோடி அரசை குறை சொல்லாமல், நீங்க தமிழகத்தில் ஆட்சியை பிடித்து என்ன செய்திர்கள் என சொல்லுங்க என கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழக மக்கள் தற்பொழுது மிக தெளிவாக உள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வதை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அப்போது பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தால், பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என உதயநிதி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் தங்கள் பகுதியில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இது சரி செய்யப்படுமா.? என கேள்வி எழுப்பிய அந்த பெண் , கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கேட்க, உடனே திக்குமுக்காடி போன உதயநிதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு வழியாக கேள்வி எழுப்பிய அந்த பெண்ணை சமாளித்தார்.

இதே போன்று பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இடையே அங்கு கூடியிருந்த பெண்கள் பலரும் எங்களுக்கு மகளிர் உரிமைத்துறை கிடைக்கவில்லை அதைப் பற்றி பேசுங்கள் என கேட்க,

இருங்கம்மா வரேன் அத பத்தி பேசுறேன் என டென்ஷனான உதயநிதி ஸ்டாலின், மைக்கை நீட்டி நீ வேணா பேசுறீயா என பெண் ஒருவரிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை பார்த்து மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைத்ததா? என கேள்வி எழுப்பினார். ஆனால் அங்கு கூடி இருந்த பெண்களோ உரிமைத்தொகை எங்களுக்குகிடைக்கவில்லை! என பதில் அளித்து கூச்சலிட்டனர்,

உங்கள் யாருக்குமேகிடைக்கவில்லையா? என அவர்களை சமாதானம் செய்த உதயநிதிஸ்டாலின் தகுதி உள்ள அனைவருக்கும் தேர்தல் முடிந்து ஐந்தாறு மாதத்தில்உரிமைத்தொகை வழங்கப்படும் என அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதே போன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈரோடு பகுதியில் வாக்கு சேகரித்தபோது அங்கு இருந்த பெண் வியாபாரி ஒருவர் எனக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று முறையிட அப்போது ஏதாவது காரணம் இருக்கும் என்று முதல்வர் பதிலளித்தார்

அதற்கு அந்த பெண் என் கணவர் அரசு வேலையில் இருக்கிறார் என்று சொன்னபோது அப்படி இருக்கும்போது கேட்பது நியாயம் இல்லையே என்று முதல்வர் பதில் சொன்னார். அதற்கு அந்த பெண் பதிலடியாக என் கணவர் சாப்பிட்டால் என் வயிறு நிரம்பிவிடுமா? என்று எதிர் கேள்வி கேட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இப்படி திமுகவினர் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு பெண்கள் தாய்மார்கள் கேள்வி கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்து வரும் நிலையி, மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என்பதும், அந்த மாற்றத்துக்கான கட்சி பாஜக தான் என தங்கள் ஆதரவை பாஜகவுக்கு அளித்து வருவதையும் தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.