திமுக போட்ட புல் டாஸ்… ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்சர் பறக்க விட்ட அண்ணாமலை… பாஜகவுக்கு சாதகமா மாறிய தமிழக தேர்தல் களம்….

0
Follow on Google News

திமுக போடும் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பும் வகையில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புல் டாஸ் பால் சிக்குனா சும்மா இருப்பாரா.? அப்படி திமுக போட்ட புல் டாஸ் பாலை தன்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்சர் பறக்க விட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தற்பொழுது அண்ணாமலை அடித்துள்ள ஹெலிகாப்டர் சாட் பாஜவுக்கான திருப்புமுனையாக அமைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் திமுக வாக்குறுதியில், கச்சத்தீவை மீட்டெடுப்போம் என தெரிவித்து இருந்தது. இதற்கு இந்தியாவிடம் இருந்த கச்ச தீவு எப்படி இலங்கைக்கு தாரை வர்க்கப்பட்டது என கண்டறிய ஆர்டிஐயிடம் தகவலை அண்ணாமலை கேட்ட பின்பு கச்சத்தீவு விவகாரம் மிக பெரிய விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் கச்சதீவு குறித்த ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் 1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார். மேலும், அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கச்ச தீவு அப்படி தாரை வர்க்கப்பட்டது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு அண்ணாமலை கொண்டு வந்த பின்பு.

இந்த விவகாரத்தை பிரதமர் மோடியும் கையில் எடுத்துள்ளார். கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரை வார்த்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிவந்ததை சுட்டி காட்டிய பிரதமர் மோடி, இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியதுடன், காங்கிரசை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கச்ச தீவு விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், கடலோர பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் திமுக மீது கோபத்தையும், பாஜகவுக்கு ஆதரவையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதியில் கச்ச தீவை மீட்போம் என திமுக தெரிவித்ததை மிக சரியாக அரசியல் ரீதியாக கையாண்டு தமிழக அரசியலில் டர்னிங் பாயிண்டை ஏற்படுத்தி விட்டார் அண்ணாமலை என்கிறது அரசியல் வட்டாரங்கள்..