வேல் யாத்திரையில் பழனியை தெறிக்க விட்ட பாஜக.! தெறித்து ஓடும் திமுக எம்எல்ஏ IP செந்தில்குமார்.!

0
Follow on Google News

தமிழக பாஜக தொடங்கியுள்ள வெற்றி வேல் யாத்திரை நவம்பர் 5ம் தேதி தொடங்கி தமிழக முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது, திருத்தனியில் தொடங்கிய இந்த வேல் யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்லும் பாஜகவில் வெற்றி வேல் யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.

நவம்பர் 23ம் தேதி பழனி வந்த வெற்றி வேல் யாத்திரைக்கு திண்டுக்கல் மாவட்டம் எல்லையில் இருந்து மிக பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இருந்து பழனி முருகன் கோவில் வரை நூற்றுக்கு அதிகமான வாகனங்கள் அணிவகுக்க பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கையில் வேலுடன் பொது மக்களை பார்த்து கையசைத்து கொண்டே வந்தார், வழியெங்கும் அவருக்கு மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பழனி முருகன் கோவில் வந்த எல்.முருகன் அங்கே சுவாமி தரிசனம் முடித்து வெற்றிவேல் யாத்திரை நடக்கும் பொது கூட்டம் விழா மேடைக்கு சென்றார். அங்கே திரளாக குடியிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் சிறிது நேரம் திணறியது காவல் துறை, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மத்திய உள்த்துறை இனை அமைச்சர் முரளிதரன் திமுகவை மிக கடுமையா பேசினார், தொடர்ந்து கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் தங்கள் கையில் இருந்த தொலைபேசியை எடுத்து டார்ச் அடித்த புகைப்படம் கடந்த இரு தினகளாக சமூக வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து பேரணியை தொடங்க இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட போது, அவருடன் ஆயிரக்கணக்கில் கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் கைதானார்கள், ஒரு கட்டத்தில் கைது செய்ய போதிய வாகனம் இன்றி தவித்தது காவல் துறை. பழனியை உலுக்கிய பாஜகவின் வெற்றி வேல் யாத்திரை அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் IP செந்தில்குமாரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக அமல்படுத்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக போராட்டம் நடத்திய போது, குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மிக பெரிய பேரணியை பழனியில் நடத்தியது பாஜக, அப்போதிருந்தே பழனியில் பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்தார் திமுக எம்எல்ஏ IP செந்தில்குமார், இதனை தொடர்ந்து கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்த கறுப்பர் கூட்டம் பின்னனியில் திமுக ஐடி பிரிவை சேர்ந்த செந்தில்வாசன் கைது செய்யப்பட்ட பின் பழனி முருகன் கோவிலை சுற்றியுள்ள முருக பக்தர்கள், திமுகவுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் அணிவகுக்க தொடங்கினர்.

அதன் வெளிப்பாடு தான் இரு தினகளுக்கு முன் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு பெருமளவில் மக்கள் கூடியதாக கூறபடுகிறது, இந்நிலையில் இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சியின் காரணமாக, வரும் தேர்தலில் பழனி சட்டமன்ற தொகுதியில் உள்ள முருக பக்தர்களிடம் தமது அரசியல் எடுபடாது என உணர்ந்த திமுக எம்எல்ஏ IP செந்தில்குமார், பழனி தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற எந்த தொகுதியில் போட்டியிடலாம் என தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.