முதல்வர் முக ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, தனது கட்சி தொண்டர்கள் படை சூழ மதுரையில் பவனி வந்து கொண்டிருக்கையில், சற்று எதிர்ப்பாராத விதமாக வெறும் ஐந்து பேர்களுடன் வந்து, முக ஸ்டாலின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, முரசொலி அலுவலகத்தின் மூலபத்திரம் எங்கே என பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்பொழுதை முதல்வருமான முக ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி திக்குமுக்காட செய்தவர் தான் தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளர் Dr.சங்கரபாண்டி.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக நிர்வாகியான Dr.சங்கர்பாண்டி அதிரடி அரசியல் அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் வைகோ கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்க, இதை தட்டி கேட்க யாரும் இல்லையா.? என பாஜகவினர் வேதனையுடன் கேள்வி எழுப்பிய காலம் அது.
அப்போது மதுரைக்கு பிரதமர் மோடி வருகிறார், வைகோ பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட தயாராக இருக்கிறார். ஆனால் மோடி மதுரை வருவதற்க்கு முந்தைய தினம் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு போஸ்டர் தென்படுகிறது. அதில் நாளை கருப்பு கொடி காட்ட வருகை தரும் வைகோ அவர்களை பாஜக இளைஞரணி சார்பாக உங்களை வரவேற்று வழி அனுப்ப வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறது என DR.சங்கர்பாண்டி புகைப்படத்துடன் மதுரை முளுவதும் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை பாஜக கொடிகளை கையில் ஏந்தி தனது இளைஞரணி நிர்வாகிகளுடன் கருப்பு கொடி காட்ட வரும் வைகோவுக்கு வரவேற்பு கொடுக்க காத்திருந்தார் DR.சங்கர்பாண்டி. ஆனால் களத்தின் சூழல் அறிந்த வைகோ அங்கே வரவில்லை. இது தான் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி வந்த வைகோ பின் வாங்குவதர்க்கு தொடக்க புள்ளியாக அமைந்தது.
இதே போன்று நீர்நிலைகளை அரசு அதிகாரிகள் துணையுடன் அரசியல் முக்கிய புள்ளிகள் ஆக்கிரமிக்க, கண்மாய் விற்பனைக்கு என அதிகாரம் படைத்தவர்களுக்கு எதிகார தனி ஒருவனாக போஸ்டர் அடித்து ஒட்டி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கண்மாய் ஆக்கிரமிப்புகளை DR.சங்கர்பாண்டி தடுத்து நிறுத்திய சம்பவங்களும் மதுரை புறநகர் பகுதிகளில் நடந்தது. இதே போன்று பாஜகவுக்கு எதிராக திமுகவினர் பிரச்சாரம் செய்து வரும் அதே பாணியில் போஸ்டர் மூலம் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து அது மக்களுக்கும் புரியும் வகையில் செய்து வருகின்றவர் தான் DR.சங்கர்பாண்டி.
அந்த தற்பொழுது அமித்ஷா இந்தி குறித்து பேசியதற்கு முதல்வர் முக ஸ்டாலின் உட்பட திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில். இந்தி படித்தால் தமிழ் அழியாது, திமுக தான் அழியும் என்கிற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்து திமுகவுக்கு எதிராக அவர்கள் பாணியிலே டீ-சர்ட் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த DR.சங்கர்பாண்டியின் இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த டீ சர்டை மற்றவர்களுக்கும் விநியோகம் செய்து வருகிறார்.
இதே போன்று திமுக மற்றும் அதன் தலைமைக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் DR.சங்கர்பாண்டியை கடந்த இரன்டு வருடங்களுக்கு முன்பு தற்பொழுது திமுக அமைச்சராக இருக்கும் மூர்த்தி அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது DR.சங்கர்பாண்டி வீட்டிற்கு நேரடியாக சென்று மிரட்டிய சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடதக்கது. இப்படி திமுகவை தொடர்ந்து துணிச்சலுடன் எதிர்த்து அரசியல் செய்து வரும் DR.சங்கர்பாண்டி துணிச்சல் மதுரை புறநகர் மாவட்ட இளைஞர்களை மட்டுமின்றி மாற்று கட்சியினரை கூட வெகுவாக கவர்ந்து அவர்களை பாஜக பக்கம் வரவைத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் தான் ஏற்று கொண்ட கொள்கைக்கும், தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அந்த கட்சியின் தலைவர்களுக்கு எதிராக நடக்கும் பொய் பிரச்சாரகளை துணிந்து முறியடித்து வருவதும் மட்டுமின்றி, ஆளும் திமுகவை சிறிதும் பயமின்றி எதிர்த்து அரசியல் செய்துவரும் DR.சங்கர்பாண்டியின் அரசியல் என்பது பாஜக தலைவர்கள் பலர் மேடைகளில் பேசும்போது, ஒவ்வொரு பாஜககாரனும் வீட்டில் இருந்து கிளம்பும் போதே தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டு கொண்டு தான் கட்சி பணிகளை செய்கிறான் என்பதை உறுதி படுத்தியுள்ளது என மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள பாஜகவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.