திமுக முக்கிய அமைச்சர்களின் பதவி பறிபோகிறது…முதல்வரின் அதிரடியில் TRB ராஜா, சேகர்பாபு பதவிகளிலும் மாற்றம்…

0
Follow on Google News

2024-ம் ஆண்டிற்கான தேர்தல் முடிவுகள் வெளியானதும் திமுகவில் பல அமைச்சர்களின் பதவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆப்பு வைக்கப் போவது உறுதியாகியுள்ளது! இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபுவின் அமைச்சர் பதவி மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கக்கூடிய டிஆர்பி ராஜாவின் அமைச்சர் பதவிகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!

2021 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த நான்கு வருடங்களில், நான்கு முறை அமைச்சரவையை மாற்றியுள்ளதும் கவனிக்கத்தக்கது! குறிப்பாக ஆவடி நாசரின் பதவிப்பறிப்பு PTR-ன் இலாக்கா மாற்றம் உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டவர் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி மாற்றிக் கொடுக்கப்பட்டு, போக்குவரத்து துறையானது அமைச்சர் சிவசங்கருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாவது முறையாக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் MLA-வாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அவரும் தமிழக அமைச்சரவையில் ஒரு அமைச்சராக பதவியேற்றார்.

அப்போது பெரிய கருப்பன், மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மருமகனான சபரீசன் ஆகியோர் 30,000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்திருந்ததாக நிதித்துறை அமைச்சராக இருந்த PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி, திமுகவிற்குள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்த PTR ஆடியோ வில் இருந்தது தன்னுடைய குரல் இல்லை என விளக்கம் அளித்திருந்தார். எனினும் பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் அது PTR-ன் ஆடியோ தான் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே தமிழக அமைச்சரவையானது மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. இதில் PTR பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் அமைச்சரவைக்குள் முதன்முறையாக அடி எடுத்து வைத்த TRP ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டு PTR-க்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதி மற்றும் சபரீசன் குறித்த சர்ச்சை ஆடியோவால் தான் PTR-ன் நிதி துறையை திமுக பறித்து, PTR-ஐ ஓரம் கட்டி வைத்துள்ளதாக பலரும் தங்களின் வைத்திருந்தனர் முன்வைத்திருந்தனர்.

அதேபோல் இந்த அமைச்சரவை மாற்றத்தில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது ஆவடி நாசர் தான். நாசரின் மகன் ஆவடி மாநகராட்சி டெண்டர் விவகாரத்தில் தலையிடுவதாக எழுத புகார் மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியது, தொண்டர்கள் மீது கற்களை அமைச்சர் நாசர் அவர்கள் தூக்கி வீசியது என, பல சர்ச்சைகளில் சிக்கியதால் பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது நான்காம் கட்டமாக தமிழக அமைச்சரவையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் நெசவாளர் மற்றும் கைத்தறி துறை அமைச்சரான காந்தி தேர்தல் வேலைகளை சரியாக பார்க்க தவறியதாக எழுந்த குற்றச்சாட்டால், அவர் நீக்கப்பட்டு, அவரின் பதவியை திமுக மாநில அணி செயலாளரான எழிலரசனுக்கு வழங்கப்படவுள்ளதாகவும்,

அதேபோல் கடந்த மூன்று வருட காலமாக ஆதி திராவிட நலப்பிரிவுத்துறை அமைச்சராக இருந்து, எந்த ஒரு பணியையும் சரிவர முன்னெடுக்காத காரணத்தால் கயல்விழி அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உதயநிதி அவர்களுக்கு நெருக்கமான சங்கரன்கோவில் ராஜாவுக்கு அப்பதவி வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான செந்தில் பாலாஜி அவர்களின் மதுவிலக்கு மற்றும் மின்சார துறையை, ஏற்கனவே அமைச்சர் முத்துசாமிக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவுக்கும், தொழில்துறை அமைச்சராக இருக்கக்கூடிய TRP ராஜா அவர்களுக்கும் கூடுதல் பொறுப்பாக பிரித்து வழங்கப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மேலும் தமிழக அமைச்சரவையில், என்னென்ன நடக்கப் போகிறது என்றும், யார் யார் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.