ரஜினி இதை செய்ததுண்டா.? கேணையர்களை கண்டால் சிரிப்பு வருகிறது.! மனுஷ்ய புத்திரன் கடும் தாக்கு.?

0
Follow on Google News

ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி நிலுவை இருந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல், அக்டோபர் வரையிலான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் ராகவேந்திரா மண்டபத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர்ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது மனுவில், “கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியுள்ளோம்.

சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளோம். அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.

மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி நிர்ணயிக்க கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்க தடை விதிக்க வேண்டும்”. என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி, ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க கூடியதாக உள்ளது.

உடனடியாக வழக்கை வாபஸ் பெறுவதற்கான உறுதியளிக்க வேண்டும், இல்லையென்றால் என ரஜினிகாந்த் மீது அபராதம் விதிக்க நேரிடலாம் என எச்சரித்தார். நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் திமுக பேச்சாளர் மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ள கருத்தில் லாக்டவுன் காலத்தில் தன் ராகவேந்திரா மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட ஆறரை இலட்சம் சொத்து வரியை குறைக்கக்கோரி ரஜினி தொடர்ந்த வழக்கில் ‘நீதிமன்ற நேரத்தை வீணடிக்கவேண்டாம்.

வழக்கை வாபஸ்பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்’ என நீதி மன்றம் கண்டனம். ரஜினி வழக்கை வாபஸ் பெற முடிவு.லாக்டவுன் காலத்தில் மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கிய உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சுங்கக்கட்டணம், மூடிக்கிடந்த கடைகளுக்கு சிறு வியபாரிகள் கட்டிய வரி என எதை எதிர்த்தாவது வழக்கு தொடுக்கவேண்டாம், ஒரு வாய்ஸாவது ரஜினி கொடுத்தததுண்டா? தன்னுடைய பிஸினனஸைத்தவிர எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு ஆள் மாற்றத்தைக் கொண்டுவருவார், நல்லாட்சியைக் கொண்டுவருவார் என்றெல்லாம் புளுகும் கேணையர்களைக்கண்டால்தான் சிரிப்பு வருகிறது என மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ளார்.