மகள்கள், மனைவி கடும் டார்ச்சர்.! ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு பின்னணி என்ன.?

0
Follow on Google News

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவு இவர்கள் இருவர் மறைவுக்குப்பின் ஆளுமை இல்லாத தலைவர்களால் தமிழக அரசியல் களம் காலியாக இருந்து வருகிறது, இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கருணாநிதி உயிருடன் இருக்கும் போது, அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த், புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவிப்பை மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பின்பு, இதோ கட்சியை தொடங்கி விடுவார் என பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது, ஆனால் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த புது புது படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது தவிர அவருடைய அரசியல் கட்சி பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை, இதனைத் தொடர்ந்து புதிய புதிய படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் அரசியல் கட்சி எப்போ என்பது பற்றி தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம், டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார், ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியது. இன்னும் டிசம்பர் 31 தேதிக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில், இன்று தனது உடல்நிலையை மேற்கோள் காட்டி அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இந்த அறிவிப்பு அவரது ரசிகர் மட்டுமின்றி தமிழக மக்களையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்க காரணம் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த டார்ச்சர் தான் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியானதும் அவர் கட்சியை தொடங்கியிருந்தால் கடந்த மூன்று வருடங்களில் அவரின் அரசியல் கட்சி பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும், ஆனால் அவருடைய மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் சினிமாவில் தொடர்ந்து படம் நடிக்க வலியுறுத்தியும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என வலியுறுத்தி வந்துள்ளனர். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் வரும் பல கோடி சம்பளத்தை அவருடைய இரண்டு மகள்களும் பிரித்து எடுத்து வந்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி தொடங்கினால் ரஜினிகாந்த் புதிய படங்களில் நடிக்க முடியாது என்பதால் ஒரு படம் நடித்து முடிப்பதற்குள் அடுத்த புதிய படத்துக்கான வேலையை அவருடைய மகள்கள் தயார் செய்து விடுவார்கள், தனது தந்தை மூலம் எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அந்த அளவு சேர்க்க ரஜினிகாந்த் இரண்டு மகள்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அதன் வெளிப்பாடு தான், கபாலி, காலா, எந்திரன் 2.0, பேட்ட, தர்பார், மற்றும் அண்ணாத்த போன்று நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் படம் நடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகள்கள் இந்த முடிவுகளுக்கு லதா ரஜினிகாந்தும் ஆட்சேபம் தெரிவிக்காமல் ஆதரவு தெரிவித்து வந்துள்ளார், ஆனால் ரஜினிகாந்த் அண்ணாத்தே படத்துக்கு பின்பு அரசியல் கட்சி தொடங்கலாம் என இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அண்ணாத்தே படப்பிடிப்பு பாதியிலே நின்றது மேலும் ரஜினிகாந்த் புதிய அரசியல் தொடங்குவதும் தடை பெற்றது, இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நன்கு அறிந்திருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ரஜினியை தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க வலியுறுத்தாமல் இருந்திருந்தால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே புதிய கட்சியை தொடங்கி தேர்தலை சந்திக்க தயாராக இருந்திருப்பார், ஆனால் தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்திருப்பது அவரது குடுப்பதினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் தமிழக மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தான் என கூறப்படுகிறது.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?