பாஜக போட்ட கண்டிஷன்… ஓபிஎஸ் தலைமையை ஏற்கும் கொங்கு மண்டல முக்கிய தலைவர்கள்… எடப்பாடிக்கு கேட் அவுட்…

0
Follow on Google News

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் தேர்தல் முடிவுக்கு முன்பே எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பங்கள் வெடிக்க தொடங்கிவிட்டது என அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் தன்னை ஒரு ஆளுமை மிக்க தலைவர் என நினைத்துக் கொண்டு ஜெயலலிதா போன்று தனிச்சையாக எடப்பாடி எடுக்கும் முடிவுகள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி தலைமைக்கு பக்க பலமாக இருந்து வரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மாஜி அமைச்சர் தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால் சிறுபான்மையினரின் வாக்குகள் நமக்கு கிடைக்கும், மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் தன்னுடைய தலைமையை ஏற்கும் என்கின்ற சிலரின் தவறான ஆலோசனையை கேட்ட எடப்பாடி தணிச்சையாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுகவில் உள்ள முக்கிய முன்னாள் மாஜி அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் எடப்பாடி மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு உட்பட சில முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி தனிச்சையாக முடிவெடுத்தது, அந்தந்த பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய தலைவர்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார் எடப்பாடி பழனி சாமி. இதனால் பல இடங்களில் அதிமுக பூத் கமிட்டியில் கூட ஆட்கள் இல்லாத சூழல் உருவானது.

இதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டம் ஒன்று யாரும் கட்சிப் பணியை சரியாக செய்யவில்லை, எல்லோரும் எனக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என எடப்பாடி புலம்பியதாக ஒரு தகவல் பரவியது.இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருந்த அதிமுக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக கைகோர்த்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இனியும் எடப்பாடி என்னும் மண் குதிரையை நம்பி ஓடி எந்த பயனும் இல்லை என முடிவுக்கு வந்துள்ள எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள கொங்கு மண்டலத்தை சேர்த்த அதிமுக முக்கிய தலைவர்கள், மீண்டும் பாஜக உடன் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்து பாஜக தலைமைக்கு தூது அனுப்பியதாகவும், அதற்கு எடப்பாடி தலைமையிலான அதிமுகவை பாஜக கூட்டணியில் ஏற்று கொள்ளாது என பாஜக தலைமை காரராக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் ரகசியமாக சந்தித்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஓபிஎஸ் உடன் இணைந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தான் நமக்கும் நல்லது நம்முடைய எதிர்கால அரசியலுக்கும் நல்லது என்பதை தீர்மானித்து ஓபிஎஸ் உடன் கை கோர்க்க தயாராகி வருகிறார்கள் அதிமுகவில் இருக்கும் எடப்பாடி அதிருப்தி தலைவர்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.