கருணாநிதி மகன் என்ற பிறப்பு சான்றிதழை வைத்து காந்தி,. புத்தர் போல ஸ்டாலின் பேசலாமா.?ஆர்.பி.உதயகுமார் பதிலடி.!

0
Follow on Google News

பாரத் நெட் திட்டத்தை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எல்லையை தாண்டி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது அவரது இயலாமை காட்டுகிறது. அவர் பேசுவது பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற இலக்கணத்தை இழந்துவிட்டார். பொதுவாக சந்தேகம் இருக்கலாம் கேள்வி கேட்கலாம் இதுதான் ஜனநாயகம். ஆனால் எதையுமே கேட்காமல் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

திமுக ஆட்சியில் செய்த சாதனை என்னவென்றால் தமிழகத்தில் இருளில் மூழ்கடித்தது தான். அப்பாவி மக்களின் நிலங்களை அபகரித்து, எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கை சீரழித்தது இதுதான் திமுக ஆட்சியின் அடையாளமாகும். அதுமட்டுமல்லாது 2ஜி ஊழலை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை ஊழலுக்காக இந்தியாவில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று மக்களுக்காக உழைத்து வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் அமைச்சர்களை எல்லாம் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்வது வருவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 49 ஆண்டுகளில் சவால்களை எல்லாம் சாதனையாக்கி மக்கள் போற்றும் நல்லரசாக திகழ்ந்து வருகிறது இதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அம்மா அரசுக்கு கிடைக்கும் தொடர்மக்கள் செல்வாக்கால் நாம் காணாமல் போய்விடுவோம் என்ற உள்நோக்கத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார்.

கருணாநிதி மகன் என்ற பிறப்பு சான்றிதழை மட்டும் வைத்து அரசியல அங்கீகாரம் பெற ஏதோ காந்தி போலவும்,. புத்தர் போலவும் ஸ்டாலின் பேசி வருவதை மக்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.பாரத் நெட் தமிழகத்திற்கு வந்தால் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் இந்த திட்டத்தை தடுக்க வேண்டும் என்று உள்ளத்துடன் பல்வேறு களங்கத்தை கற்பிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பாரத் நெட் பணிகள் செயல்பட்டு வருகிறது இதையெல்லாம் ஸ்டாலின் குழந்தைத்தனமாக புரிந்துகொண்டு பேசுவதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது நிச்சயம் பாரத் நெட் நிச்சயம் தமிழகத்துக்கு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.