அதிமுக, திமுக தொடாத உச்சத்தை தொட்ட பாஜக.! 1 மில்லியன் பாலோவர்ஸ்….சாதனை படைத்த தமிழக பாஜக.!

0
Follow on Google News

சமீப காலமாக பாஜகவின் வளர்ச்சி அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது, பாஜக தலைவராக எல்.முருகன் பதவி ஏற்ற பின் மாற்று கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பாஜகவை நோக்கி படையெடுத்து வருவது தமிழக்தில் இருக்கும், திராவிட காட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என எதிர்கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் தற்போது தூள் தூளாக உடைந்து பாஜக ஆதரவாக மாறி வருகிறது.

சமீபத்தில் நடந்து வரும் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்று திமுகவினர் எழுப்பும் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவது, மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் உருவாகி வருகிறது, இதனால் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது, அதே வேலையில் திமுகவின் செல்வாக்கு சரிவை நோக்கி செல்கிறது, இதனை தொடர்ந்து, பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இனி பங்கேற்க மாட்டார்கள் என திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்றைய காலத்தில் அணைத்து அரசியல் கட்சிகளும் அவர்களுக்கென அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர், இதில் தமிழக்தில் உள்ள பிரதான பெரிய காட்சிகளாக கூறப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு காட்சிகளை விட பல மடங்கு அதிக பின்பற்றுவர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது தமிழக பாஜக முகநூல் பக்கம்.

அதிமுக முகநூல் பக்கம் 2.5 லட்சம் பின் தொடர்பாளர்கள், திமுக முகநூல் பக்கம் 8 லட்சம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர், ஆனால் தமிழக பாஜகவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனை கடந்துள்ளது, தமிழகத்தில் ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களாக கொண்ட ஒரே அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது, இது குறித்து நடந்த ஆய்வில் கடந்த ஒரு வருடங்களாக முகநூல் பக்கம் மட்டுமின்றி தமிழகம் முழவதும் மக்கள் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.