அலை கடலென திரண்ட பாஜகவினர்.! கைது செய்ய போதிய வாகனம் இல்லாமல் தவித்த தமிழக காவல்துறை.!

0
Follow on Google News

தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது, இந்த யாத்திரையானது திருத்தனியில் தொடங்கி தமிழகம் முழுவதும் வலம் வந்து திருச்சொந்துரில் யாத்திரையை நிறைவு செய்வதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது, இதனை தொடர்ந்து இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் பாஜக நடந்து வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டதது, இதனை தொடர்ந்து வெற்றி வேல் யாத்திரை இன்று திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தமிழக முழுவதும் உள்ள பாஜகவினர் மத்தியில் எழுந்தது, ஆனால் வெற்றி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் என்றும் நேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இல்லத்துக்கு முன் பெரும் திரளாக பாஜகவினர் திரண்டனர், வேல் யாத்திரைக்கான வாகனமும் தயார் நிலையில் இருந்தது, இதனை தொடர்ந்து வெற்றிவேல் யாத்திரையை தனது இல்லத்தில் இருந்து தொடங்கினர் எல்.முருகன், இந்த யாத்திரை திருத்தனி முருகன் கோவில் நோக்கி பயணிக்க தொடங்கியதை தொடர்ந்து பாஜகவினர் பெருமளவில் யாத்திரை செல்லும் வாகனத்தை பின்னோக்கி சென்றனர், இதனால் யாத்திரை செல்லும் சாலை ஸ்தம்பித்தது.

இந்நிலையில் யாத்திரை செல்லும் வாகனம் திருத்தனி நெருங்கியதும் காவல் துறையினர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் யாத்திரையில் கலந்துகொண்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர், இந்த தகவல் காட்டு தீ போன்று தமிழகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது செய்ததை கண்டித்தும், வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தது தமிழக காவல்துறை, ஆனால் பெருமளவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போதிய வாகனம் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளானது தமிழக காவல்துறை, இந்நிலையில் திடீரென எப்படி பெரும் கூட்டம் கூடியது என தமிழக அரசு குழப்பத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.