கல்யாணராமனின் இழிவான செயலுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்.! இஸ்லாமிய தலைவர்கள் பாஜகவுக்கு பாராட்டு.!

0
Follow on Google News

சமூக வலைதளத்தில் பிரபலமாக செயல்பட்டு வரக்கூடிய கல்யாணராமன், இஸ்லாமியர்கள் நம்பிக்கையை இழிவு படுத்தும் விதத்தில் பேசிய பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதரான நபிகள் பற்றி இஸ்லாமியர்கள் மனம் புண்படும் வகையில் கல்யாணராமன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கல்யாணராமன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் கல்யாணராமனின் இந்த இழிவான செயலை பாஜக தலைவர்கள் கண்டித்து வருவது இஸ்லாமிய மக்களுக்கு பாஜக எந்த சூழலிலும் துணையாக இருக்கும் என்பதை எடுத்து காட்டுவதாக இஸ்லாமிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், கல்யாணராமன் இஸ்லாமியர்கள் இறை தூதர் குறித்து பேசி கைதாகியுள்ள இந்த சூழலில், பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

எல்லா மதங்களும் சம அளவில் புனிதமானவை, எல்லா புனித நூல்களும் அருளப்பட்டவை….. எல்லா இறைதூதர்களும் சம அளவில் தெய்வீகமானவர்கள். இது தான் இந்துத்துவம்.மத நம்பிக்கை மீது அவதூறு செய்யும் யாராக இருந்தாலும் கண்டிக்கிறேன் என பேராசிரியர் தெரிவித்துள்ளார், மேலும் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை IPS தனது டிவீட்டரில் தெரிவித்துள்ள கருத்தில்,பாஜக தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது என்றும்,

மேலும்,பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது.மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என அண்ணாமலை IPS தெரிவித்துள்ளார், தொடர்ந்து கல்யாணராமனின் இந்த இழிவான செயலை பாஜக தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில், பாஜக தலைவர்களின் கண்டனங்களை தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் கட்சி தலைவர் வேலூர் இப்ராஹிம் உட்பட இஸ்லாமிய தலைவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்யாணராமனின் இந்த செயல் எண்ணற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கடும் உழைப்பால் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக பாஜகவின் நற்பெயருக்கு கெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக பாஜக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதற்க்கு முன் வேறு ஒரு சர்ச்சையில் கல்யாணராமன் சிக்கிய போது, கல்யாணராமனுக்கு பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என தமிழக பாஜக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .