பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு, திமுகவை எந்த ஒரு சமரசம் இல்லாமல் அரசியல் செய்து வருகிறார். குறிப்பாக திமுக அமைச்சர்கள், மற்றும் முக்கிய தலைவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவது போன்று, DMK FILES என்கிற பெயரில், திமுகவினர் குவித்து வைத்துள்ள சொத்துக்களை வெளியிட்டு திமுகவினர் மத்தியில் மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
மேலும் DMK FILES அண்ணாமலை வெளியிட்டது பத்து சதவிகிதம் தான், இன்னும் 90 சதவிகிதம் அண்ணாமலை கைவசம் உள்ளது என கூறப்படுகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி சிறை செல்வதற்கு அண்ணாமலையும் ஒரு காரணம் என கூறப்படும் அளவுக்கு, திமுகவினர் உடன் சமரசமின்றி அரசியல் செய்து வரும் அண்ணாமலை, திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் ஏற்று அரசியலில் களமாடி வருகிறார் அண்ணாமலை.

தமிழ்நாடு முழுவது திமுகவுக்கு எதிராக அண்ணாமலை அரசியல் செய்து வருவது போன்று, அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதே மாவட்டத்தில் இருக்கும் பாஜக முக்கிய புள்ளிகள் அரசியல் செய்தால் மட்டுமே பாஜக அந்தந்த மாவட்டத்தில் மேலும் வளர்ச்சி அடைவதற்கு உதவும், ஆனால் ஒரு சில பாஜக முக்கிய புள்ளிகள் அவர்கள் மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்களுடன் இருக்கும் கள்ள உறவு பற்றி உளவு துறை மூலம் அமித்ஷா கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு சில பாஜகவினர், அவர்கள் மாவட்டத்தில் மட்டுமில்லை, அவர்கள் சமூகத்தை சேர்ந்த பிற மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் உடனும் நெருக்கமாகன தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, பாஜகவில் இருந்து கொண்டு திமுகவுக்கு வேலை செய்து வருவதாகவும், மேலும் இவர்கள் நெருக்கமாக இருக்கும் திமுக அமைச்சர்கள் மூலம் தேவையானதை திரைமறைவில் சாதித்து கொண்டு,
சம்பந்த பட்ட அமைச்சர் ஏதாவது சர்ச்சையில் சிக்கினாலும், அந்த அமைச்சருக்கு எதிராக வாயே திறக்காமல் அமைதியாக இருந்து வருவது பின்னணி காரணம், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் போடும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு தான் என்கிற ரிப்போர்ட்ம் உளவு துறை மூலம் அமித்ஷா கணவத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறிப்பிட்ட அந்த மாவட்டத்தில் முக்கிய பாஜக புள்ளியாக இருக்கும் அந்த நபர் தான் திமுக அமைச்சருக்கு விசுவசமாக இருக்கிறார் என்றால், அந்த மாவட்டத்தில் பாஜகவினர் வேறு யாரும் திமுக அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்யாதபடி பார்த்து கொள்கிறாராம் அந்த பாஜக முக்கிய புள்ளி. அப்படி பாஜகவினர் யாராவது அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்தாலும் அவர்களை எப்படி , எந்த வழியில் ஆப் செய்ய வேண்டுமோ அந்த வகையில் அந்த பாஜக முக்கிய நபர் ஆப் செய்து விடுகிறாராம்.
இப்படி தமிழகத்தில் திமுக அமைச்சர்களுடன் கள்ள உறவில் இருக்கும் பாஜகவை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் லிஸ்ட் அமித்சா கையில் உள்ளது என்றும், அவர்களின் புயூஸை புடுங்கி வீட்டுக்கு அனுப்பும் வகையில், அடுத்து எந்த பொறுப்பும் கொடுக்காமல் கட்சியில் இருந்து ஓரம் கட்டிவிட வேண்டும் என தமிழக பாஜக தலைமைக்கு அமித்ஷாவிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சொந்த மாவட்டதில் உள்ள திமுக அமைச்சர் தூக்கி போடும் எலும்பு துண்டை கவ்வி கொண்டு அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் சில பாஜகவினரை களை எடுத்துவிட்டு, புதியதாக யார் அந்த மாவட்டத்தில் உள்ள திமுக ஆளுமைகளை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்வார்களோ அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் முடிவில் உள்ளது பாஜக தலைமை என்கிறது பாஜக வட்டாரங்கள்.