சத்தமே இல்லாமல் பாஜக தலைமையில் மெகா கூட்டணி ரெடி… எந்தந்த தொகுதி… யார் யாருக்கு.?

0
Follow on Google News

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலவு விலகுவதாக அறிவித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அறிவித்துள்ள நிலையில் இதுவரை அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட சொல்லும்படியாக எந்த கட்சியும் முன் வரவில்லை.

இந்நிலையில் சந்தமே இல்லாமல் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியை தொடங்கியுள்ளது பாஜக தலைமையில் ரெடியாக இருக்கும் மெகா கூட்டணியில் பாமக, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தேமுதிக, திருமாறன்ஜி யின் தென் இந்திய பார்வேர்ட் ப்ளாக் கட்சி, ஜி கே வாசன், இந்திய இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் ஆகியோர் பாஜக தலைமையிலான மெகா கூட்டணியில் இடம் பெற இருப்பதற்கு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொகுதி பங்கீடு கிட்ட தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் எந்தத்த கட்சி எந்தத்த தொகுதி என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தர்மபுரி, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், ஸ்ரீ பெரும்பூர் அரக்கோணம் ஆகிய தொகுதிகளும், ஓ பன்னீர் செல்வத்திற்கு தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய நான்கு தொகுதிகளும், இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகனும், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரனுக்கு இரண்டு தொகுதிகளும் அதில் சிவகங்கையில் டிடிவி தினகரனும், திருச்சியில் சாருபாலா தொண்டைமான் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு, வடசென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளும், தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜிக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியும், ஜிகே வாசனுக்கு திருப்பூர், ஏசி சண்முகத்திற்கு வேலூர், பாரிவேந்தருக்கு கள்ளக்குறிச்சி, டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி.

ஜான் பாண்டியனுக்கு நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாஜக புதுச்சேரி தமிழகம் உட்பட 19 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும், இதில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தர் ராஜன், விருதுநகர் தொகுதியில் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, மத்திய சென்னையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்திரேயன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராமநாதபுரம், திருவள்ளூர், ஆரணி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சிதம்பரம், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு,நாமக்கல், கரூர்,பெரம்பலூர், புதுச்சேரி, என 19 தொகுதிகள் வரை பாஜக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, திருமாறன் ஜி, கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ஏசி சண்முகம், ஜிகே வாசன், பாரிவேந்தர் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிருவார்கள், மேலும் ஓபிஎஸ் வேட்பாளர்களும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பதற்கு முன்பே அதிமுக அல்லாத பாஜக தலைமையிலான மெகா கூட்டணியை சத்தமே இல்லாமல் பாஜக பேசி முடித்து விட்டது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.