அண்ணாமலை நடிப்பில் வெளியான அரபி திரைப்பட டீசர்..! என்ன கதை தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழக பிஜேபி மாநில தலைவரான அண்ணாமலை நடித்த கன்னட திரைப்படமான அரபி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த டீசர் வைரலாகிவருகிறது. உடல் ஊனமுற்ற ஒருவர் விளையாட்டில் சாதிப்பது போன்ற கதைக்களத்தில் நாயகனின் பயிற்சியாளரராக வருகிறார் அண்ணாமலை.

தமிழக பிஜேபி தலைவரான அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சொக்கம்பட்டியில் பிறந்தார். ஐபிஎஸ் முடித்துவிட்டு கர்நாடகாவில் பதவியேற்றுக்கொண்டார். பதவியில் இருக்கும்போதே சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிய அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்தவுடன் தமிழக பிஜேபியில் இணைந்தார்.

குறுகிய காலத்திற்குள்ளாகவே தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இவர் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரின் முதல் அறிமுகப்படமும் கன்னடம் என்பது கூடுதல் சிறப்பு. அந்த திரைப்படத்தின் முதல் டீசர் இன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரண்டு கைகளும் இல்லாத நீச்சல் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனைகள் படைத்த விஸ்வாஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளனர். மேலும் கதாநாயகனின் பயிற்சியாளராக அண்ணாமலை இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் புல்லட் பைக்கில் மாஸாக வரும் காட்சி டீசரில் வெளியாகியுள்ளது.