முக ஸ்டாலின் பேசியதை வைத்தே முக ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை..! இதெல்லாம் வேற லெவல் அரசியல்ப்பா..!

0
Follow on Google News

சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை மரணம் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவி படித்த பள்ளியில் மதம் மற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எழுந்துள்ள குற்றசாட்டை தொடர்ந்து. இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது பாஜக. தற்கொலை செய்து மரணம் அடைந்த மாணவிக்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் மரணத்தை பாஜக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றசாட்டுகளை வைத்து வரும் நிலையில். அனிதா மரணத்தின் போது அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்,அதில் முக ஸ்டாலின் பேசியதாவது.

மாணவி அனிதா தற்கொலை என்று சொல்லமாட்டேன், இந்தக் கொலைக்கு காரணமாக அமைந்திருக்கின்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆக இருந்தாலும் சரி, தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆக இருந்தாலும் சரி, தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆக இருந்தாலும் சரி, அதேபோல மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளராக இருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆக இருந்தாலும் சரி,

அவர்கள் எல்லாம் உடனடியாக இதற்கு பொறுப்பேற்று கொண்டு அவர்கள் அத்தனை பேரும் கூண்டோடு பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவராக முக ஸ்டாலின் இருந்த போது மாணவி அனிதா மரணத்தின் போது அவர் பேசிய வீடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தெரிவித்திருப்பதாவது, இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் தமிழக பாஜகவுக்கு இல்லை

எங்களது கோரிக்கைகள் இவையே: மாணவி லாவண்யாவின் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.