ஈவு இரக்கமற்ற காட்டாட்சி நடக்கும்போதா இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும்.! ஜோதிமணி வேதனை.!

0
Follow on Google News

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது, இதில் இந்தியாவில் அதி வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள மக்களுக்கு சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்றப்பட்டுள்ளதாக பல்வேறு இடங்களில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உடனே ஆக்சிஜன் அனுப்ப அந்தந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளனர், இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் எதையாவது செய்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குங்கள், நோயாளிகள் உயிர் இழப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார், அவர் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன் இந்தியாவில் எந்தவொரு அரசும் இப்படி அசிங்கப்பட்டதில்லை. நோய் வந்தால் மருத்துவமனைக்குப் போகலாம்.அங்கு கூட ஆக்சிஜன் இல்லை என்றால் எங்கு போவது? இப்படியொரு ஈவு இரக்கமற்ற காட்டாட்சி நடக்கும்போதா இப்படியொரு கொள்ளைநோய் வரவேண்டும்,

மேலும், திரு. மோடி பத்து வருடங்கள் கேட்டார். ஆனால் அவரால் என்ன சாதிக்க முடியும் என்பதை 7 வருடங்களிலேயே நிரூபித்துவிட்டார். திரு. மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு.
நாம் இந்த கொரொனா போரை ஒருவருக்கொருவர் ஒற்றுமை, அன்பு, கனிவுடன் கடப்போம். ஆர் எஸ் எஸ் / பிஜேபி விதைத்த வெறுப்பையும் பிரிவினையையும் மண்ணில் புதைப்போம். கொரொனாவை விட கொடிய இந்த அரசின் ஆணவத்தால் ஆக்சிஜன்,தடுப்பூசி,மருந்துகள் இல்லாமல் மதவேறுபாடு இல்லாமல் மக்கள் செத்து மடிகிறார்கள்.இந்த வெறுப்பு,பிரிவினை அரசியல் நமக்கு கொடுத்த பரிசு இதுதான்.மனிதம் காப்போம் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.