சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, கோவையில் பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் அமித்ஷா தமிழகம் வந்ததின் பின்னணயில் உள்ள அரசியல் காரணம் என்ன என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகம் வந்த அமித்ஷா ஊழலில் மாஸ்டர் டிகிரி பெற்றவர்கள் தான் திமுக என பேசியதின் அமித்சாவின் உள் நோக்கம் என்ன என்கிற தகவல் வெள்ளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, அடுத்த 2029 நாடாளுமன்ற தேர்தலில் பலம் குறைந்த மாநிலக்களில் ஆதிக்கம் செலுத்த மிஷன் 2029 என்கிற தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளார் அமித்ஷா. மிஷன் 2029ல் முக்கியமாக தென் மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற தென் மாநிலத்தில் உள்ள சுமார் 130 நாடாளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 100 தொகுதிகளை பாஜக வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் வென்று எடுக்க வேண்டும் என்பதற்காக மிசின் 2029க்கான தேர்தல் வியூகங்களை அமித்ஷாவின் குழு வடிமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மட்டும் தனியாக ஆப்பரேஷன் தமிழ்நாடு என தனியாக வியூகங்களை வகுத்து, தனி கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் அமித்ஷா, மேலும் தமிழ்நாட்டுக்காக வியூகங்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என அண்ணாமலை – அமித்ஷா இடையில், சமீபத்தில் அமித்ஷா தமிழகம் வந்த போது கலந்து ஆலோசிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும், ஆளும் அரசு செய்யும் தவறை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு கட்டுவது மூலம், ஆளும் அரசின் மீது மக்களுக்கு கோபம் ஏற்படும், அதே நேரத்தில் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக பேசும் பொருளாக இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்கு ஆளும் திமுக அரசுக்கு எதிராக தற்பொழுது உள்ளது போன்று கடுமையான அரசியலை முன்னெடுக்கும் போது, ஆளும் திமுக அரசின் மீது கோபத்தில் உள்ள மக்கள் திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.
மேலும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பயணம் மேற்கொள்ளும் பொழுது, பாஜகவினர் மத்தியில் உற்சாகம் ஏற்படும், அதே நேரத்தில் கொள்கை சார்ந்த விஷயத்தில் சமரசம் இன்றி அரசியல் செய்ய வேண்டும். ஆட்சியாளர்களின் ஊழல் புகார்களை தூசி தட்டி அடுத்தகட்ட நடவடிக்கையாக ரெய்டு மூலம் அவர்கள் பற்றிய ஆதாரத்தை சேகரித்து இறுக்கி பிடிக்க வேண்டும்.
அப்படி ஆட்சியில் இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள், அமைச்சர்களின் ஊழல் புகார்க்ளுக்கு புதியதாக தேடி சிக்க வைக்க வேண்டாம், ஏற்கனவே அவர்கள் மீது உள்ள புகார்களை தூசி தட்டினால் போதும், ஆளும் திமுகவினரை ஊழல் வழக்கில் சிக்க வைத்து பின்பு, அவர்கள் வழக்கை நோக்கி தான் ஓடுவார்கள், தேர்தல் பணியில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது என்கிற பல வியூகங்கள் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் கலந்து ஆலோசித்த அமித்ஷா,
தமிழகத்தில் திமுகவினர் மீது உள்ள ஊழல் குறித்த ஆதாரங்களை தனக்கு உடனே அனுப்பி வைக்கவும் அமித்ஷா உத்தரவிட்டதை தொடர்ந்து, ஏற்கனவே DMK FILES காக அண்ணாமலை சேகரித்து வைத்திருந்த ஆதாரங்கள் பல, இன்னும் வெளியிட படாமல் இருந்த நிலையில் அதில் குறிப்பிட்டு சில முக்கிய ஆதாரங்களை அமித்ஷா பார்வைக்கு அண்ணாமலை எடுத்து சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பே பல திமுக அமைச்சர்கள் அமித்ஷா ஆப்பரேஷன் மூலம் சிக்கி, திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருப்பார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.