அமெரிக்க புகழ் PTR தியாகராஜன் வேஸ்ட்… திமுக ஐடி பிரிவு தலைமையை ஏற்கிறாரா தர்மபுரி எம்பி செந்தில்குமார்.?

0
Follow on Google News

சமூக வலைத்தளத்தில் திமுக தொண்டர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்து வருகிறார் திமுக எம்பி செந்தில் குமார், திமுக ஐடி பிரிவு இதுவரை செய்யாத வேலைகளை செய்து திமுகவினரிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார், இதனால் தற்போது இருக்கும் திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜனுக்கு பதில் தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு திமுக ஐடி பிரிவு தலைமை பொறுப்பை கொடுத்து, ஐடி பிரிவை வழிநடத்த வாய்ப்புகள் வழங்க வேண்டும் என திமுகவினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திமுக தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்வதர்க்கு முன்பு, நாள் தோறும் சமூக வலைதளத்தில் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருந்தது, திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளன சம்பவம் தான் அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு மேடைகளிலும் ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசி அவரை அரசியலில் திமுக தலைவர்கள் முன்னிறுத்தி வந்தனர்.

ஆனால் முக ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யவில்லை மிசா காலத்தில் வேறு ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என பத்திரிகையாளர் ஒருவர் குற்றசாட்டை முன்வைத்த போது இது பெரும் சர்ச்சையாக வெடித்து முக ஸ்டாலின் மிசா கைது பெரும் கேள்வி குறியானது, ஆனால் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய PTR தியாகராஜன் தலைமையிலான திமுக ஐடி பிரிவு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது திமுக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையின் போதும் வழக்கம் போல் PTR தியாகராஜன் தலைமையிலான ஐடி பிரிவு வேடிக்கை மட்டுமே பார்த்தது, இதன் பின்பு இனி அமெரிக்காவில் இருந்து வந்த PTR தியாகராஜனை நம்பினால் மோசம் போகிவிடுவோம் என முடிவு எடுத்து தேர்தலுக்காக ஐபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து திமுக ஐடி வேலையை அந்த நிறுவனத்திடம் ஒப்படைந்தது திமுக தலைமை.

இந்நிலையில் தேர்தல் முடிந்து ஐபெக் நிறுவனம் அடுத்த மாநில தேர்தல் வேலைக்கு சென்ற பின்பு இனி வரும் காலங்களில் திமுக ஐடி பிரிவு எப்படி செயல்படும் என திமுகவினர் மத்தியில் ஒரு அச்சம் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு எதிராக பதிவு செய்பவர்களை சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவிப்பது, சமூக ஊடகத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை ஒன்றிணைப்பது போன்ற வேலைகளை திறன்பட செய்து வருகிறார் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார்.

இதனை தொடர்ந்து தற்போது திமுக ஐடி பிரிவு செயலாளராக இருக்கும் PTR தியாயகராஜன் வேஸ்ட் அவரை ஐடி பிரிவு தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு திமுக எம்பி செந்தில்குமாரை அந்த பொறுப்பில் நியமித்து திமுக ஐடி பிரிவை வழிநடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது, இதனை தொடர்ந்து ஏற்கனவே PTR தியாகராஜன் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருந்து வரும் திமுக தலைமை, தேர்தல் முடிவு வந்த பின் திமுக ஐடி பிரிவில் அதிரடி மாற்றங்களை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.