கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்: வைரலாகும் போட்டோ

0
Follow on Google News

நடிகர் விஜயகாந்த கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவ்வப்போது அவரை வெளிநாடுகளுக்கு கூட்டிச்சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் அவரது குடும்பத்தினர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் துபாய் நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேப்டனை வீல்சேரில் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று வைரலானது.

இதையடுத்து, துபாயில் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அவருடன் இளையமகன் சண்முக பாண்டியனும் சென்றதாக கூறப்பட்டது. அவரது மனைவி பிரேமலதாவும் நேற்று சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டு சென்றார். கேப்டன் பூரண குணமுடன் திரும்பி வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் இறைவனை வேண்டி வந்தனர்.

இந்நிலையில், கேப்டன், தான் நலமாக இருப்பதாக, மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்துடன், ‘நான் உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தபோது எடுத்தபடம்’ என்று வாசகமும் எழுதியுள்ளார்.

இது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. விரைவில், அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.