சென்னையில் முகாமிட்டுள்ள விஜய் படக்குழு

0
Follow on Google News

விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. அடுத்தடுத்து, மூன்று கட்ட படப்பிடிப்புகளை முடித்துவிட்ட இப்படக்குழு தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளது.

சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் மிகப்பிரம்மாண்டமான செட் அமைத்து விஜய்-பூஜா ஹெக்டே பங்கேற்கும் பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அனிருத் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பொங்கல் விருந்தாக இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.