தென் சென்னையில் பாஜக வேட்பாளராக களம் இறங்கும் நடிகர் அர்ஜுன்…அனல் பறக்கும் அரசியல் களம்..

0
Follow on Google News

இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் எந்தந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்கிற தகவல் அதிகாரபூர்வமாக வெளியே வரவில்லை என்றாலும், கூட , பாஜக கூட்டணி, மற்றும் திமுக கூட்டணிக்கு இடையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலின் அரசியல் களத்தில் நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது, அந்த வகையில் ஏற்கனவே உள்ள திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணியை முறித்து கொண்டு தனி தனியாக அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியாக, பாஜக தலைமையில் ஒரு கூட்டணியாக போட்டியிட இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியை நோக்கி படையெடுக்க, எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு யாரும் வராததால் அரசியல் அனாதையாக பரிதாபத்தில், கட்சி அலுவகத்தை கூட்டணிக்காக திறந்து வைத்து வாசலிலே இலவு காத்த கிளியாக யாராவது வருவார்களா என்று காத்து கொண்டிருக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக.

இந்நிலையில் இந்த பரபரப்பான அரசியல் சூழலில் சமீபத்தில் கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களை மட்டும் சந்தித்து பேசினார், தமிழக வந்த பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த போது, அவரை நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சந்தித்து சில நிமிடம் பேசினார். இந்த சந்திப்பின் போது, நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணைய போகிறார் என்கிற தகவல் தீயாக பரவியது.

ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம் கொடுத்த நடிகர் அர்ஜுன், தான் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பிரதமர் மோடியை நேரில் வரும்படி அழைப்பு விடுத்ததாகவும், அவரும் விரைவில் வருவதாகவும் தெரிவித்த அர்ஜுன். பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது இது தான் முதல் முறை, எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பிரதமர் மோடியை பிடிக்கும், அந்த வகையில் தமிழக வந்த மோடியை சந்திக்க விருப்ப பட்டோம், அதற்கான அனுமதி உடனே கிடைத்து என தெரிவித்து இருந்தார் அர்ஜுன்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் சமீப கால நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவில் விரைவில் இணைந்து விடுவார் என்பது போன்று தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்களுடைய பலம் என்னவென்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருந்து வருகிறது, அந்த வகையில் தமிழகத்தில் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்துள்ள மக்கள் செல்வாக்கு என தமிழக அரசியலில் பாஜவுக்கான ஆதரவு அலை மக்கள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டுள்ளதை உளவு துறை மூலம் அறிந்து கொண்ட டெல்லி பாஜக தலைமை.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால், வேட்பாளர் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும், அந்த வகையில் மக்கள் மத்தியில் பரிச்சயமான, மக்கள் ஏற்று கொள்ள கூடிய வேட்பாளரை தேர்வு செய்து போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் முடிவில் இருக்கும் பாஜக தலைமை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் அர்ஜுனுக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், விரைவில் பாஜகவில் இணைய இருக்கும் நடிகர் அர்ஜுன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில், சினிமா துறையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் ஜெய்கிந்த் போன்ற தேசப்பற்று மிக்க படங்களை எடுத்து மக்கள் மத்தியில் சிறந்த தேசியவாதி என்கிற பெயரை பெற்றுள்ள அர்ஜுன் தென் சென்னையில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்கிற தகவலும் பாஜக தலைமைக்கு சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.