ரஜினிக்கும் ரஜினி மகளுக்கும் தக்க பாடம் புகட்டிய தமிழர்கள்… இப்ப தெரியுதா தமிழர்கள் யார் என்று.?

0
Follow on Google News

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இந்த படத்தை முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாகவே புரமோட் செய்தனர். இதனால் படத்தின் வசூலும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் லால் சலாம் திரைப்படம் சமூக கருத்துகள் அடங்கிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என விளம்பரம் செய்யப்பட்ட நிலையி, இந்த படத்தை எதிர்பார்த்து பார்க்க போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரஜினியின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வலிமை இப்படத்தின் திரைக்கதைக்கு இல்லாததே தோல்விக்கு காரணம். மேலும் இந்த படம் ரஜினிகாந்தின் நேரடிப்படம் என இல்லாத நிலையில், இதில், கேமியோ ரோலில் தான் அவர் நடித்துள்ளார் என நினைத்த ரசிகர்கள் ஜெயிலர் படம் முதல் நாளுக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் இந்த படத்துக்கு கொடுக்கவில்லை. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என இரண்டுமே ஏதோ கடமைக்கு காசு வாங்காமல் வேலை பார்த்தவர் போல இசையமைத்திருக்கிறார் என ரசிகர்கள் குமுறி வருகிறார்கள்.

இந்நிலையில், லால் சலாம் படத்தை முதல் நாளில் ரசிகர்கள் பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில், ஃபயரே இல்லாமல் ரஜினி படம் வெளியான நிலையில், வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது. மேலும் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் ரஜினிகாந்த் நடித்தும் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்கிற கேள்வி தான் எழுகிறது.

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ.98 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. அதில் 10 சதவீத வசூலை கூட லால் சலாம் படம் எட்டாதது தான் ஆச்சர்யமாக உள்ளது. குறிப்பாக படம் நன்றாக இருக்கோ, இல்லையோ ரஜினி படத்தின் முதல் நாள் ரசிகர் கூட்டம் திரையரங்கில் திருவிழா போன்று காட்சியளிக்கும்.

ஆனால் அப்படி லால் சலாம் படத்திற்கு வராமல் தமிழர்கள் புறக்கணிக்க புறக்கணித்து இப்படம் ஓடாமல் போனதற்கு காரணம் தமிழர்களை பற்றி மிக கீழ்த்தரமாக கருத்துக்களை தெரிவித்த கன்னட நடிகை தன்யாவை இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது தான் என்று கூறப்படுகிறது.

‘லால் சலாம்’ படத்தின் நடித்துள்ள நடிகை தன்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழர்களை இழிவு படுத்தும் விதத்தில், “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்.” என தமிழர்களை மிக கீழ்த்தரமாக இழிவு படுத்தும் விதத்தில் கருத்துக்களை பதிவு செய்த தன்யாவுக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதனால் கடுப்பான தன்யா “இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன். நான் நடிப்பதாக சொன்ன தமிழ் படங்களில் இருந்தும் வாபஸ் பெறுகிறேன். நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்” என வீரப்பாக தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கையில் தமிழர்களை கொச்சையாக பேசிய தான்யா பாலகிருஷ்ணா தான் இன்று ‘லால் சலாம்’ படத்தின் ஹீரோயின். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று தான்யாவை ஐஸ்வர்யா நடிக்க வைத்திருக்கிறார்.

இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால்தான் தமிழர்கள் இப்படத்தினை புறக்கணித்து தியேட்டர் செல்லாமல் போனது தான் லால் சலாம் படம் தோல்வி அடைந்துள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழர்களை இழிவு படுத்திய ஒரு நடிகைக்கு ரஜினி மகள் வாய்ப்பு கொடுத்தா சும்மா விடுவார்கள், லால் சலாம் படத்தை தமிழர்கள் ஓன்று கூடி மன்னனை கவ்வ விட்டது மூலம் தெரிந்திருக்கும் தமிழர்கள் யார் என்று என கெத்தாக தமிழ் அரவரலர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.