விஜய் முகத்தில் கரியை பூசிய கேரள மக்கள்… சினிமா மோகத்தில் இருக்குக்கும் தமிழர்கள் திருந்த வேண்டும்..

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்த நிலையில், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் கூட அதை நோக்கி இருந்து வந்தது, இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் சென்னை பனையூரில் விஜய் அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். விஜய் அரசியல் கட்சியைப் பிப்ரவரி முதல் வாரத்தில் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் அப்போதே வெளியானது.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் துவங்கியிருப்பதாகவும் அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்றும் அறிவித்திருக்கும் நடிகர் விஜய், அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிடும் என அறிவித்ததோடு, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளிலும் முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில், கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடந்த நிலையில், அதில் பல்வேறு விஷயங்களை தொண்டர்களுக்கு வீடியோ வாயிலாக அறிவுறுத்தியுள்ளாராம் விஜய். அத்துடன், 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடவும் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் அலுவலகத்தில் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.‌ அதில் கேரளாவை சேர்ந்த 14 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தையும் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றும் அளவிற்கு உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் கேரள நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கேரளாவில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றம் செய்வதற்கு அங்குள்ள ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. விஜய்யின் மக்கள் நல திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு ஒரு ரசிகராக தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் நேரடி அரசியலில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக கேரளாவில் உருமாற்றம் அடைவதை விரும்பவில்லை எனவும் கேரள விஜய் ரசிகர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கேரள மக்கள் அவர்களின் தலைவர்களை சினிமாவில் இருந்து தேர்வு செய்ய மாட்டார்கள், களத்திலிருந்து தேடுவார்கள் என்று சிறிது நாட்களுக்கு முன்பு கேரள நடிகர் மம்முட்டி கூறியிருந்தார். அதன் படியே விஜயை நாங்கள் ஒரு நடிகராக ஏற்று கொள்வோம் ஆனால் தலைவராக ஏற்று கொள்ள மாட்டோம் என விஜய் ரசிகர்களே கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்களை களைத்து வருவது, விஜய்க்கு அரசியல் வேற சினிமா வேறு என தக்க பாடத்தை புகட்டியுள்ள கேரள ரசிகர்களை பார்த்து இனிமேலாவது திருந்துவார்களா தலைவா நீ தான் அடுத்த முதல்வர் என சினிமா நடிகர்கள் பின்னால் ஓடும் தமிழக ரசிகர்கள்.