சந்திராயன் 3க்கு இருக்கும் மிக பெரிய சவால்… விண்ணில் அடுத்தடுத்து என்ன நடக்கும் தெரியுமா.?

0
Follow on Google News

விண்வெளியில் நிலவு சார்ந்த ஆய்வில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக இன்றளவும் இருக்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் சந்திராயன். இதற்கு முன்பு சந்திராயன் ஒன்றின் நோக்கம் நிலவை சுற்றி வந்தால் போதும் என்கின்ற ஒரு குறிக்கோளுடன் சென்ற சந்திராயன் ஒன் அதை வெற்றிகரமாக செய்து முடித்தது திரும்பியது.

அதன் பின்பு சந்திராயன் இரண்டு நிலவில் நிலவில் இறங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்கின்ற திட்டத்துடன் சென்றது. ஆனால் சந்திராயன் இரண்டு நிலவிற்கு அருகில் சென்று, நிலவில் இருந்து வெறும் 2.1 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், வெற்றியின் அருகில் சென்று தோல்வி அடைந்தது சந்திராயன் இரண்டு.

இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள சந்திராயன் 3 இதற்கு முன்பு சந்திராயன் இரண்டில் ஏற்பட்ட தோல்விகள் மூலம் கற்றுக்கொண்டு பல புதிய மாற்றங்கள் உடன் தயாராகி உள்ள சந்திராயன் 3ன் திட்டம் என்பது, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்பதே, அந்த வகையில் இதற்கு முன்பு சந்திராயன் 2ல் நடந்த தோல்வியில் இருந்து கற்று கொண்டது தான் சந்திராயன் 3 என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சந்திராயன் 3 பூமியில் இருந்து கிளம்பிய பின்பு அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி நாம் அறியலாம், பூமியிலிருந்து 170 கிலோ மீட்டர் உயரம் சென்ற பின்பு பூமியில் உள்ள ஈர்ப்பு விசையினால் சந்திராயன் 3 பூமியை சுற்றியுள்ள நீர்வட்ட பாதையில் சுற்றி வரும், சுமார் 20 நாட்கள் சுற்றி சுற்றி பூமியில் இருந்து அதனுடைய தூரத்தை அதிகரித்து நிலவை நோக்கி சந்திராயன் 3 செல்லும்.

இந்நிலையில் பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பது போன்று, நிலவுக்கும் ஈர்ப்பு விசை உண்டு, பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையின் மய்ய புள்ளி சுமார் பூமியில் இருந்து 62300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, அந்த மய்ய புள்ளியை சந்திராயன் அடைந்ததும்.பூமியில் இருந்து வரும் ஈர்ப்பு விசை துண்டிக்கப்பட்டு , நிலவின் ஈர்ப்பு விசையால் நிலவை சுற்ற ஆரம்பிக்கும் சந்திராயன் 3.

அப்படி பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து நிலவின் ஈர்ப்பு விசைக்கு மாறுவதற்கு 20 நாட்கள் வரை ஆகும். நிலவை சுற்றி வரும் சந்திராயன் 3 நிலவின் நீள் வட்ட பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி தரை இறங்குவதற்கு வர தொடங்கும். இதற்கு முன்பு சந்திராயன் 2 வில் வெற்றிகரமாக நிலவின் அருகில் வரை சென்று, நிலவில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தோல்வியின் மூலம் தற்பொழுது சந்திராயன் மூன்றில் மிக பாதுகாப்பாக நிலவில் லேண்டிங் செயல்பாடுகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்

அந்த வகையில் சந்திராயன் இரண்டு தரையிறங்க வேண்டிய லெண்டரில் இம்முறை நிறைய அப்டேட்டுகள் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளார்கள். அப்படி இம்முறை வெற்றிகரமாக நிலவில் சந்திராயன் 3 தரையிறங்கும் பொழுது நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் திறன் இந்தியாவுக்கும் உண்டு என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகிற்கு வெளிப்படுத்துவார்கள். அந்த பெருமைக்காக ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிட்டத்தக்கது..