பழிவாங்க படும் பிரபல அரசியல் தம்பதியினர்… மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..

0
Follow on Google News

மும்பை : அரசியல்வாதி தம்பதிகளான எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் எம்பி நவநீத் ராணா ஆகியோர் மீது சிவசேனா அரசு தனது பழிவாங்கல் நடவடிக்கையை எடுத்திருப்பதாக தம்பதியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் சிறை அதிகாரிகள் தங்களை மிக மோசமாக நடத்தியதாக குற்றசாட்டை முன்வைத்ததோடு பிரதமரை சந்தித்து முறையிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வரான உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான மாதோஸ்ரீ க்கு வெளியே ராணா தம்பதிகள் ஹனுமான் சாலிசா பாடப்போவதாக அறிவித்து தொண்டர்களையும் பக்திப்பாடல் பாட அழைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து பதட்டமான சூழல் உருவானது. ஏப்ரல் 23 அன்று மும்பை காவல்துறையால் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் வன்முறையை டூண்டுதல் மற்றும் இருபிரிவினருக்கிடையே கலகமூட்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார் விரைந்து கைதுசெய்ததுடன் உடனடியாக எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் எம்பியுமான நவநீத் ராணாவையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர்.

மே 4 அன்று சிறப்பு நீதிமன்றம் தம்பதிகளுக்கு ஜாமீன் வழங்கியதுடன் வழக்கு குறித்த எந்தவொரு விஷயத்திலும் பத்திரிகையாளர்களிடம் பேசக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நவநீத் ராணா தம்பதி மே 5 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் நவநீத ராணாவுக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்பான்டலைடிஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அரசியல்வாதி தம்பதியினர் “பிஜேபியை முதுகில் குத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே ரானாக்களிடம் கொள்கைகள் பற்றி பேச கூடாது. கற்பிக்க கூடாது. சிறையில் இருந்தபோது அதிகாரிகள் எங்களை மிக மோசமாக நடத்தினர். டெல்லி சென்று பிரதமர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் லோக்சபா சபாநாயகரை சந்தித்து நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை முறையிட இருக்கிறோம்.

லாக்கப் முதல் சிறை வரை நாங்கள் பட்ட இன்னல்களை பெண்களை மதிக்கும் பிஜேபி தலைவர்களிடம் எடுத்துக்கூற இருக்கிறோம். இதை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்பது ஒன்றும் நீதிமன்ற அவமதிப்பு கிடையாது.” என நவநீத் ராணா தெரிவித்தார். ரவி ராணா உடனிருந்தார்.