சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் காலூன்ற வியூகத்தை மாற்றுகிறதா பாஜக.? என்ற தலைப்பில் நெறியாளர் குணசேகரன் தொகுத்து வழங்க பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர், இந்த விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் குணசேகரன், இதர பேச்சாளர்களுக்கும் மற்றும் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் இடையில் காரசார விவாதம் நடந்தது.
தமிழர்களின் அடையாளமாக எதெல்லாம் இருக்கின்றதோ, அதையெல்லாம் பாஜக கைப்பற்ற நினைக்கின்றதா.? என நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பேராசிரியர், தமிழகத்தில் இருக்கும் பாஜகவினர் தமிழர்கள், ஒரு தமிழன் தமிழர்களின் பண்பாடுகளை கொண்டாடுவதில் போற்றுவதிலும் என்ன தவறு இருக்கின்றது என பதிலளித்தார். அடுத்ததாக தமிழகத்தில் சமஸ்கிரதம் பேசிக்கொண்டு, ஹிந்தி பேசிக்கொண்டு, இங்கே வேரூன்ற முடியாது என்பதால் பாஜக வியூகங்களை மாற்றுகிறதா.? என நெறியாளர் குணசேகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் பேராசிரியர்,
நாங்கள் ஏன் தமிழகத்தில் இந்தி பேசி, சமஸ்கிரதம் பேசி, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும், என நீங்கள் நினைக்கின்றீர்கள்.? என்ன ஒரு சிந்தனையின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுகிறது என புரியவில்லை என்றும், தமிழகத்தில் தமிழ் பேசி தானே பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க முடியும், அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் கன்னடம் பேசி தானே அங்கே பாஜக கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது, கேரளாவில் மலையாளம் பேசி தானே அங்கே உள்ள கிராமங்கள் தோறும் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தவர்.
மேலும் தொடர்ந்து பேசிய மற்ற பேச்சாளர்கள் ஸ்ரீநிவாசன் என்கிற பெயரில் ஸ்ரீ என்பது சமஸ்கிருதம் என தெரிவித்ததற்கு பதிலளித்த பேராசிரியர் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ஸ் என்பது சமஸ்கிருத வார்த்தை, அப்படியென்றால் ஸ்டாலின் என்ற பெயரில் உள்ள ஸ் என்ற எழுத்தை போட வேண்டாமென்று ஸ்டாலினிடம் தெரிவிப்பார்களா என பதிலடி கொடுத்தார், தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கையில், நெறியாளர் குணசேகரன் அரசு மருத்துவமனை இருக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனை எதற்கு.? என்றும்,
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் வந்தபின்பு, எய்ம்ஸ் மருத்துவமனை எதற்கு என கேள்வி எழுப்பினார், இதற்கு பதில் அளித்த பேராசிரியர் அப்படியானால் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டாம் என கூறுங்கள் என பதிலளிக்க, குணசேகரன் மீண்டும் மீண்டும் எதற்கு தமிழ் நாட்டுக்கு எய்ம்ஸ் தேவை என தொடர்ந்து பேச, அப்படியானால் எய்ம்ஸ் வேண்டாம் என்று சொல்லுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு விரோதமானது என கூறுங்கள், என பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் என பதிலளித்த வீடியோ, திமுக கோட்டையான சன்டிவில் அமர்ந்து தனது வாதங்களை திறன்பட எடுத்துள்ளதாக வலைதளவாசிகள் இந்த விடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .