கட்சிக்காக என்ன செய்தார் சசிகலா, கல்வெட்டுகளில் பெயர் போட்டவர்கள் எல்லாம் பொதுச்செயலாளராக ஆகிட முடியுமா? என அதிமுக மூத்த மாஜி அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார் கூறியுள்ளார். அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில், ”நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறியுள்ளது.
ஆனால் இன்று சசிகலா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செய்துள்ளார். மேலேம் மாஜி அமைச்சர் கூறுகையில் மீசை வைத்தவரெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிடமுடியாது. அதிமுக கட்சியிக்காக சசிகலா இதுவரை என்ன தியாகம் செய்தார். இதில் அவர் தியாகத்தலைவி என பெயர் சூட்டிக்கொள்ள? சசிகலா பெங்களூர் சிறையிலிருந்து வந்த போது சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏன் வந்து மரியாதை செலுத்தவில்லை. தற்போது பொன்விழா ஒற்றுமையுடன் கொண்டாடப்படுவது அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சசிகலாவால் தான் தோல்வியடைந்ததாக கூறினார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார். சசிகலா வானத்திலிருந்து குதித்த அவதாரம் போல, தன் தான் புரட்சித்தாய் என்று கூறி வருபதை எப்படி ஏற்க முடியும். அம்மா ஜெயலலிதாவைத் தவிர யாரும் புரட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அவர் இதுவரை கட்சிக்கு எந்த புரட்சியும் செய்ததாக தெரியவில்லை இதனால் சசிகலாவை யாரும் ஏற்கமாட்டார்கள்.
ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான் அதிமுக கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அவர் இருந்த அந்த இடத்தில் அவரைத்தவிர யாரும் பொதுச்செயலாளராக முடியாது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்து திமுக தேர்தலை உள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை நடத்தியுள்ளது என்று திமுகவையும் விமர்சித்துள்ளார்.