கொட்டும் மழையில் தொண்டர் தரிசனத்தை தொடங்கிய பேராசிரியர்.! திமுகவை எதிர்கொள்ள தயார் நிலையில் பாஜக.!

0
Follow on Google News

மதுரை வடக்கு தொகுதியில் தொண்டர் தரிசனம் என்ற பெயரில் பாஜக மாநில பொதுக் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் தொகுதி முழுவதும் மிக சிறப்பாக பணியாற்றி வரும் கிளை தலைவர்களை இன்று நேரில் சந்தித்து அவர்களை பாராட்டி வருகிறார், இந்த தொண்டர் தரிசனம் நிகழ்ச்சியின் நோக்கமே சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என பாஜகவினர் தெரிவித்தனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை எதிர்கொள்ள முழு பலத்துடன் தயார் நிலையில் உள்ள பாஜக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் இந்த தொண்டர் தரிசனத்தை பேராசிரியர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாஜக முன்னாள் தேசிய தலைவரும் மத்திய உள்த்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழகம் வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்த பின் தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கான பணியை வார்டு வாரியாக தொடங்கி உள்ளனர், இந்நிலையில் தான் பொறுப்பு வகிக்கும் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கியுள்ள பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக இன்று தனது தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.

மதுரை வடக்கு தொகுதிக்குப்பட்ட புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துடன் சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கியுள்ள பேராசிரியர், அதில் முதல் கட்டமாக மதுரை வடக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிளை தலைவர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் மற்றும் திமுக அதன் கூட்டணி காட்சிகளை வரும் தேர்தலில் எதிர்கொள்வது குறித்து அவர்களிடம் ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.

புரொவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் அங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் விடாது மழை பெய்து வருகிறது. இருந்தும் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கொட்டும் மாலையிலும் திட்டமிட்டபடி இன்று தொண்டர் தரிசனம் என்ற நிகழ்ச்சியை தொடங்கிய பேராசிரியர் மதுரை வடக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

பேராசிரியர் செல்லும் பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பார்க்க முடிகிறது.இதற்கு காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், 2006-2011 திமுக ஆட்சியில் நடந்த நிலஅபகரிப்பு, திமுக குண்டர்களின் அடாவடி, கரண்ட் கட், போன்ற செயல்பாடுகளால் திமுக மீது உள்ள கோபம் மக்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக மதுரை வடக்கு தொகுதி மக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .