இயேசு ஒரு இந்து… இந்தியாவில் ஞானம் பெற்றார்…ஆதாரம் இருக்கிறது…! அடித்து கூறும் அஸ்வத்தாமன்…

0
Follow on Google News

“திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதியுள்ளார் என்கிற நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்குரியது” என்று இதற்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்து வந்த நிலையில், தற்போது பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

இயேசு ஒரு இந்து என்றும் அதற்கான ஆதாரம் உள்ளது என பேசியுள்ளார், மேலும் அஸ்வத்தாமன் பேசியதாவது, கிறிஸ்தவர்கள் வணங்குகின்ற இயேசு 12 வயதில் ஜெருசலேத்தை விட்டு ஓடிவிட்டார். பின்பு 29 வயது வரை அவர் எங்கே இருந்தார் என்று அவர் சார்ந்த மக்களுக்கு தெரியாது. நிக்கோலஸ் 1887ஆம் ஆண்டு இதைப்பற்றி நிறைய ஆய்வு புத்தகங்களை எழுதியுள்ளார், நிக்கோலஸ் மட்டுமல்ல இன்னும் பலர் இது குறித்து எழுதியுள்ளார்கள்.

இயேசு இந்தியாவிற்கு வந்து நாகலாந்தா பல்கலைக்கழகம் அருகில் ஒரு ஆறு வருடம் இருந்துள்ளார். அதன்பின்பு பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுள்ளார். அங்கே சில அந்தணர்களிடம் தொடர்பு ஏற்பட்டு பாடம் படித்துள்ளார், பின்பு லே லடாக் பகுதியில் சென்று புத்த சமய பிட்சுகள் உடன் சில நாட்கள் தொடர்பில் இருந்துள்ளார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதற்கெல்லாம் ஆயிரமாயிரம் புத்தகங்கள் இருக்கின்றது.

இது தற்போது எழுதப் பட்டது கிடையாது 1887 இல் இருந்து எழுதப்பட்டு வருகிறது. ஜெருசேலத்தில் இருந்து இயேசு இந்தியா வந்து இந்தப் புண்ணிய பூமியில் ஞானம் பெற்று அன்பே சிவம் என்று உணர்ந்துகொண்டு, அங்கே ஜெருசலம் சென்று அன்பை பரப்புங்கள் என்று சொன்னார், மதத்தை பரப்புங்கள் என்று சொல்லவில்லை. இதை நிறுவுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் இருக்கின்றது. தெய்வ நாயகம் போன்று பித்துப் பிடித்து பைத்தியம் பிடித்து இதை சொல்லவில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.