சினிமாவில் இருந்து வெளியேறுவதாக சூர்யா அறிவிப்பு.! தகரம் கட்சியைத் தொடங்குவார் என நக்கலாக பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்..

0
Follow on Google News

கடந்த 2019 ஆம் ஆண்டும் மாநிலங்களவையில் திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதள பக்கத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் இந்த எதிர்ப்புக்கு, நடிகை மற்றும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார் அதில், சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது போன்று இந்தியாவிற்கும், மக்களுக்கும் எதிராக கருத்து தெரிவித்து வருகிறீர்கள்.

மேலும், எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக நீங்கள் தெரிவிக்கும் கருத்தில் உங்கள் நடிப்பை தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலொக் தவிர்த்து உண்மையை பேசுங்கள்.இந்த மசோதா திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது என்றும்.

மேலும் உண்மை முக்கியமானது என காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என நடிகர் சூர்யா தெரிவித்த தகவலை தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம். நீங்கள் சினிமாவில் இருந்து வெளியேறிய பிறகு தகரம் கட்சியைத் தொடங்குவீர்கள்.. அவ்வளவுதான் என நக்கல் செய்து சூர்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்..