டார்க் டூ ஆர் டை திரைப்படத்தில் அந்தரத்தில் தொங்கும் மோகன்லால்… கடைசியில் நடந்தது என்ன?

0
Follow on Google News

மோகன்லால் மற்றும் நதியா நடிப்பில் 2018 ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “நீராளி”. டார்க் டூ ஆர் டை தான் தான் நீராளி. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் வார்மா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நாசர், சூரஜ் வெஞ்சரமூடு, பார்வதி நாயர், திலீஷ் போதன் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

மோகன்லால் பெங்களூரில் ஜெம்மாலஜிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். அப்போது மோகன்லாலுக்கு செல்போனில் அழைப்பு வருகிறது. அதில் மனைவி நதியாவை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என தகவல் வந்ததும். பெங்களூரில் இருந்து உடனே கோழிக்கோடுக்கு கிளம்புகிறார். அப்போது அவரது கம்பெனியில் இருந்தது சரக்கு ஏற்றி செல்லும் வாகனம் ஒன்று கிளம்ப இருக்கிறது. அந்த வாகனத்தில் ட்ரைவர் சூராஜ் வெஞ்சாரமூடுவுடன் பயணிக்கிறார்.

கர்நாடக – கேரள பார்டரில் உள்ள மலைப்பகுதியில் பயணித்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு இவர்கள் வந்த வாகனம் தடுப்புகளை உடைத்துக்கொண்டு காடுகளின் முட்டிமோதி உருண்டு, ஒரு பாறையின் உச்சியில் உள்ள மரக்கிளையில் பள்ளத்தாக்கை நோக்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது. யானைகள் நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் டிரைவராக வந்த சூராஜ்க்கு பலத்த காயங்கள் ஏற்படுகிறது. மோகன்லால் சிறிய காயங்களுடன் கண் விழித்துப் பார்க்கும் போது பள்ளத்தாக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இந்த பள்ளத்தாக்கில் இருந்து தப்பிக்க முயற்சித்து வாகன கதவைத் திறக்கிறார் அப்போது அதிர்வு ஏற்பட்டு வண்டி கீழே விழுவது போன்று அசைவு கொள்ள முயற்சியை கைவிடுகிறார். இவர்களிடம் இருந்து கோடி மதிப்பில் உள்ள சரக்குகளை எடுக்க துரத்தி வந்த கும்பல் இவர்களைத் தேடி அலைகிறது.

ஒருவழியாக விபத்து ஏற்பட்ட பகுதியில் கண்டுபிடித்து அங்கு செல்லும்போது யானைகள் துரத்தியதால் பாதியில் திரும்பிவிட்டனர். மோகன்லால் செல்போனின் ரீசார்ஜ் செய்யாததால் அவுட்கோயிங் வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. இதற்கிடையில் மனைவியான நதியாவிடம் இருந்து அழைப்பு வருகிறது, பதறிக்கொண்டு நதியாவின் அழைப்பை எடுத்த மோகன்லால் நடந்தவற்றை சொல்ல முயற்சிக்கும் போது மனைவி பிரசவ வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதை உணர்ந்து அருகில் உள்ள டாக்டரிடம் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் மனைவி நதியா அவர் பேச்சை பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒருவழியாக டாக்டரிடம் நதியா கொடுக்க அதற்குள் காருக்குள் ஒரு பெரிய ராஜ நாகம் வந்துவிடுகிறது. அதனிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்று படம் முழுவதும் திரில்லாக நகர்கிறது. பெங்களூரில் மோகன்லால் பணிபுரியும் இடத்தில் பணி புரியும் பார்வதி நாயரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அவரிடம் நடந்ததைக் கூறி காப்பாற்ற உதவுமாறு கேட்கிறார். ஆனால் அவருடைய காதலை மோகன்லால் ஏற்காததால் ஏற்காததால் இதை மறுத்து போனை கட் செய்கிறார்.

ஒருவழியாக நதியாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இதன் பிறகு கிளைமாக்ஸ் எப்படி மோகன்லால் அந்தப் பள்ளத்தாக்கில் இருந்து தப்பி வருகிறார்? அவர் மனைவியும் குழந்தையும் பார்த்தாரா? தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வெரும் இரண்டரை மணி நேரப் இந்த திரைப்படத்தில் அரை மணி நேர காட்சி பிளாஷ்பேக்கை செல்கிறது. இந்தத் IMDB திரைப்படத்திற்க 5.8 ரேட்டிங் கொடுத்துள்ளது. திரில்லர் கலந்த இந்தத் திரைப்படத்தை பார்க்க மறக்காதீங்க…