முன்றாவது அணிக்கான வேலையை தொடங்குகள்.!உதயநிதி சந்திப்புக்கு பின் கே.எஸ்.அழகிரிக்கு உத்தரவிட்ட ராகுல் காந்தி.!

0
Follow on Google News

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கே உதயநிதியை சந்தித்து பேசிய பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு பல்வேறு தகவலை தெரிவித்து விட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 40க்கு மேற்பட்ட தொகுதிகளையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10க்கு மேற்பட்ட தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டது, இதன் பின் திமுக-காங்கிரஸ் இடையே உச்சகட்ட வார்த்தை போர் நடந்தது, எவ்வளவு நாளைக்கு காங்கிரஸ் கட்சியை நாம் தலையில் தூக்கி சுமக்க போகிறோம் என திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு வெளிப்படையாகவே பேசினார், மேலும் திமுக அதிக இடங்களில் போட்டியிடும் என உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறிவருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில், 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு திமுக தெரிவித்து விட்டதை தொடர்ந்து, பலமுறை காங்கிரஸ் தலைவரகள் திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் 15 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட அதிகரிக்க முடியாது என திட்டவட்டமாக திமுக தெரிவித்துவிட்டது, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து தானாக வெளியேற்றவே ஸ்டாலின் இது போன்று செயல்படுவதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் இருந்த உதயநிதி ஸ்டானிடம் தொகுதி பங்கீடு பற்றி சில நிமிடம் பேசியுள்ளார், அதற்கு உதயநிதி அதான் ஏற்கனவே கட்சி தலைமையும் தலைவரும் முடிவை சொல்லிவிட்டாரே என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முடித்துவிட்டு டெல்லி திருப்புவதற்காக மதுரை விமானநிலையம் வந்த ராகுல் காந்தி சில நிமிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலையை திமுக செய்து வருகிறது, பலமுறை பேசி பார்த்தும் 15 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறர்கள், ஆகையால் நீங்கள் மூன்றாவது அணி அமைப்பதற்கான வேலையை தொடங்குகள், நமது செயல்பாடுகளை பார்த்து அஞ்சி மீண்டும் நம்முடன் பேச்சுவார்த்தை திமுக நடத்தினால் 30 தொகுதிவரை பெற்றுவிடலாம், மூன்றவது அணி என்பது திமுகவை மிரட்ட தான், ஒரு வேலை நாம் கேட்ட தொகுதியை திமுக ஒதுக்கவில்லை என்றால் மூன்றாவது அணியை வலுப்படுத்துவோம் என கே.எஸ்.அழகிரியிடம் தெரிவித்துவிட்டு ராகுல்காந்தி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .