பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதா.? ரயில்வேத்துறை விளக்கம்.!

0
Follow on Google News

பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணங்களை ரயில்வே வசூலிப்பதாக, சில ஊடகங்களில் வெளியான செய்திகள், தவறாக வழிநடத்தக் கூடியவை என்றும், இது உண்மைக்கு புறம்பானது என்றும் ரயில்வேத்துறை கூறியுள்ளது. இது குறித்து ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: பயணிகளின் கூட்டத்தை குறைப்பதற்காக விழாக்கால / விடுமுறைக்கால ரயில்கள் இயக்கப்படுவது நீண்டகால நடைமுறை. விழாக்கள் தொடர்கின்றன.

இன்று கூட அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, பல தரப்பில் இருந்து விடுக்கப்படும் வேண்டுகோள் காரணமாக, விழாக்கால ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த விழாக்கால ரயில்கள் பயணிகள் கூட்டத்தை தொடர்ந்து குறைக்கின்றன. இந்த ரயில்களுக்கான கட்டணங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் சற்று கூடுதலாக இருக்கின்றன. இந்தாண்டு புதிதாக எதுவும் செய்யப்படவில்லை. இது ஏற்கனவே உள்ள நடைமுறை.

ரயில்கள் எப்போதும், மானியக் கட்டணத்தில்தான் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பயணத்துக்கான இழப்பை ரயில்வே ஏற்கிறது. கொவிட் நேரத்தில், சவாலான சூழல்களில், ரயில்களை ரயில்வே இயக்கியது. பல வழித்தடங்களில் குறைவான பயணிகள் எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டன. மக்கள் நலனுக்காக இன்னும் ரயில்களை இயக்குகிறது. அது மட்டும் அல்லாமல், ரயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்பவர்களின் பயணத்தில் ரயில்வே சிறப்பு கவனம் செலுத்துகிறது.

அனைத்து ரயில்களிலும், அதிக எண்ணிக்கையில், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. இதில் குறைவான முன்பதிவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.40 சதவீத பயணிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளில் கொவிட்டுக்கு முன்பு இருந்ததைவிட நல்ல வசதிகளுடன் பயணம் செய்துள்ளனர். கொள்கைப்படி, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளிடம், சிறப்பு கட்டணத்தில், ரூ.15க்கு மேல் கூடுதலாக வசூலிக்கப்படுவதில்லை.