பாஜக சார்பில் மதுரையில் நடந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றார், இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பாஜக நிர்வாகி வாகனம் வழிமறித்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளான பாஜக மாநகர பாஜக துணை தலைவர் ஹரிஹரன் போலீசில் புகார் அளித்துள்ளார், அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்ததாவது.
மதுரை மாநகர மாவட்ட துணைத் தலைவராக உள்ளேன் (10-1-2021) அன்று காலை சுமார் 11 மணியளவில் பாரதிய ஜனதா கட்சி கொடி கட்டிய வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் நானும் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஐடி விங் மாவட்ட தலைவர் பழனிவேல் திருப்பாலை பகுதியில் பாஜக கட்சியின் சார்பாக திருப்பாலை மந்தையில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாவிற்கு சென்று கொண்டிருந்தோம் அப்போது சாவடி தெருவில் சென்று கொண்டிருந்தபோது.
சுமார் 15 நபர்கள் பெரிய கற்கள் உருட்டுக் கட்டைகளை தூக்கிக்கொண்டு கொலைவெறியுடன் எங்கள் காரை நோக்கி ஓடி வந்து காரை வழிமறித்து இப்பகுதியிலுள்ள எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் பெரிய கல்லை தூக்கி எங்கள் காரில் எறிந்தார், இதனால் காரில் உள்ள பாஜக கட்சிக்கொடி உடைந்து முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது, எஸ்டிபிஐ கட்சியின் சுல்தான் அலாவுதீன் பெரிய உருட்டுக்கட்டையால் காரில் அடித்தார்.
இவர்களைப் பின்தொடர்ந்து வந்த PFI கட்சியைச் சேர்ந்த ஆனையூர் பகுதி தலைவர் ஷேக் இப்ராஹிம்,PFI மதுரை வடக்கு பகுதி செயலாளர் முகமது ரசக், எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரம்ஜான், ஆனையூர் பகுதி எஸ்டிபிஐ ஹாஷிம், திருப்பாலை பகுதி எஸ்டிபிஐ சேர்ந்த முகமது இப்ராஹிம், ACII மாவட்ட தலைவர் முகமது அப்துல்லா மற்றும் பலரும் விரட்டி வந்தனர், நாங்கள் உயிருக்கு பயந்து காரை விட்டு இறங்காமல் காரை பின்னோக்கி ஓட்டி வந்தோம்.
அப்போது மேற்படி நபர்கள் ஆபாச வார்த்தைகளால் எங்களை திட்டி இங்கிருந்து ஓடிப் போங்கடா, இங்கே வந்தால் உங்களையும் உங்க காரையும் பெட்ரோல் ஊற்றிக் கொடுத்து விடுவோம், உங்களை விட மாட்டோம் கொன்று விடுவோம் என்று மிரட்டி விரட்டி வந்தனர், எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வகையில் மிரட்டியதால் நாங்கள் அங்கிருந்து வந்து விட்டோம், எங்கள் காருக்கு ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் எனவே மேற்படி தாங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.