தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து நடந்து வரும் பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிக்சர் அடித்து முன்கள பணியாளர் என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர்களை திணறடித்து வருகிறார் அண்ணாமலை. தொடர்ந்து பாஜகவை குறிவைத்து கேட்கப்படும் ஆதாரமற்ற, பொய்யான கேள்விகளுக்கு சற்றும் தாமதிக்காமல் அண்ணாமலை கொடுக்கும் பதில் அடுத்து கேள்வி கேட்க முடியாதவாறு பத்திரிகையாளர்களை பின் வாங்க வைத்துள்ளது.
சமீபத்தில் பாஜக தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர், நீங்க கர்நாடகாவில் IPS அதிகாரியாக இருந்த போது காவேரி பிரச்சனைக்காக கர்நாடகாவுக்காக குரல் கொடுப்பேன் என்று நீங்கள் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறித்து கேள்வி எழுப்ப பட்ட போது பதிலளித்த அண்ணாமலை, எங்க அந்த வீடியோவை போட்டு காட்டுங்க, திமுக ஐடி பிரிவு சித்தரிச்சு எதை வெளியிட்டாலும் நீங்க நம்பி விடுவீர்களா.
எங்கே நான் காவேரி பிரச்சனையை பற்றி பேசுனேன், நான் கர்நாடக மொழியில் பேசிய வீடியோவை திமுக ஐடி பிரிவு தவறாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டால் அதை நீங்க நம்பி விடுவீர்களா.அது என்னுடைய குரலே கிடையாது , அந்த விடீயோவை போட்டு காட்டுங்க என தெரிவித்த அண்ணாமலை, முதலில் இது போன்ற சிந்தனையில் இருந்து வெளியில் வாங்க என கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அறிவுரை வழங்கினார்.
நீட் தேர்வு குறித்து பத்திரிகையாளர் ஒருவர் நீட் தேர்வு சட்ட சிக்கல் காரணமாக ரத்து செய்ய முடியாது என திமுக நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக கொடுத்த தீர்ப்பின்படி எந்த ஒரு காரணத்தை கொண்டு நீட் தேர்வை நீக்க முடியாது என்றும் தெரிந்தும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா.? என எதற்காக உங்கள் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துனீங்க.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இல்லை. ஆனால் பாஜக தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், நீட் தேர்வின் முக்கியத்துவம் பேசி வருகிறோம். ஆனால் இதை மீடியா நண்பர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருக்கலாம். என பத்திரிகையாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கு சிக்சர் அடித்தது போன்று பதிலளித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.