விளையாட்டுத்துறைக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது,இனி ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து பெறப்பட்டன கோரிக்கைளை ஏற்று ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களில் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்றும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர் என தெரிவித்த பிரதமர், நமது நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது என பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘ ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் மிகச்சிறப்பான செயல்பாடு நமது ஒட்டு மொத்த தேசத்தின் கற்பனையை கவர்ந்துள்ளது. ஹாக்கி விளையாட்டை நோக்கி புதுமையான ஆர்வம், நாடு முழுவதும் எழுந்துள்ளது. இது எதிர்காலத்துக்கு மிகவும் நேர்மறையான அறிகுறியாக இருக்கிறது. கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்களை நான் பெற்றுள்ளேன். அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீரர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர். நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது. என பிரதமர் தெரிவித்துள்ளார்.