சமிபத்தில் நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இந்நிலையில் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் ஜி எஸ் டி கூட்டத்தில் பங்குபெற முடியவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்ததை தொடர்ந்து மீம்ஸ் கிரியேட்டர் மற்றும் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் வளைகாப்பு முக்கியம் ஜி எஸ் டி கூட்டம் முக்கியமில்லையா என கேலி கிண்டல் செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்த தமிழக நிதியமைச்சர் தன்னை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிலடி கொடுத்து வந்தார். இது மேலும் அவர் மீது விமர்சனத்துக்கு வழி வகுத்தது. இதில் ஒரு பெண் செய்தி வாசிப்பாளருக்கு டிவீட்டர் வாயிலாக பதிலளித்த பழனிவேல் ராஜன், வடிகட்டிய முட்டாள்தனம், கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில் எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் என்றும்,
மேலும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என அநாகரிகமாக பதிலளித்திருந்தார், இந்நிலையில் பழனிவேல் ராஜன் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல எழுத்தாளர் மரித்தாஸ், 7நாட்கள் முன் GSTமீட்டிங் அழைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அமைச்சர் லேட்டா சொன்னாங்க அதான் போகவில்லை எங்கிறார். GST கூட்டம் புறக்கணித்த அமைச்சர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விரைந்துள்ளார்!
அத்தோடு GST கீழ் பெட்ரோல் டீசல் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு பதிவு செய்துள்ளது திமுக அரசு. GST கூட்டமா? வளைகாப்பு முக்கியமா? என்பதைத் தாண்டி மீம்ஸ்கெல்லாம் பதில் அளித்து சண்டை போடும் திமுக அமைச்சரின் செயலில் இருந்து தெரிகிறது வெட்டி வேலையில் தான் அமைச்சர்கள் நேரம் செலவிடுகிறார்கள் என்று. துறை சார்ந்த பிரச்சனை ஆயிரம் இருக்க வளைகாப்பு விளக்கம் தேவையா என கேள்வி எழுப்பிய மரித்தாஸ்.
GST மீட்டிங் போகாமல் வளைகாப்புக்கு போனீர்களா? வளைகாப்புக்குத் தான் போனீங்க. சரி என் கேள்வி:COVID மூன்றாம் அலை எதிர் நோக்கிய இந்த காலகட்டத்தில் சில நூறு கர்ப்பிணிப் பெண்களைக் கூட்டி பொது நிகழ்ச்சி நடத்தியது முட்டாள்தனமில்லையா? ஒரு உயிருக்கு ஆபத்து என்றாலும் திமுக தான் பொறுப்பு என பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் தெரிவித்துள்ளார்.