திடீரென டெல்லிக்கு பறந்த நடிகர் விஜய்… எதற்கு தெரியுமா?

0
Follow on Google News

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. இது விஜய்யின் 63-வது படமும்கூட. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புகளை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், சென்னையில் இப்படத்தின் பாடலுக்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கினர்.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக டெல்லியில் இப்படக்குழு முகாமிட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் புறப்பட்டு சென்றார். அவர் விமானத்திற்குள் இருப்பதை ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, ஷைன் டான் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.