முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களில் மூத்த அமைச்சர்கள் பல அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டிருக்க, முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சி தலைவர்களிடம் அநாகரிகமாக பதில் பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், இது திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது மட்டுமின்றி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கி வருகிறது என கூறலாம்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த GST கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கு பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏன் GST கூட்டத்தில் பங்கு பெறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்ப அதற்கு அநாகரிகமாக பதிலளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் தன்னை சமூக ஊடகத்தில் கேலி கிண்டல் செய்பவர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக செலவு செய்து வருகிறார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுக எம்பி, TKS இளங்கோவன் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார், மேலும் அரசியலில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என நான் உட்பட பல மூத்த திமுக தலைவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள், ஆனால் மீண்டும் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்ள கூடாது என்றும்.
அரசியலில் பக்குவமாக செயல்பட வேண்டும் என பழனிவேல் ராஜன் குறித்து பேசினார் TKS இளங்கோவன். இந்நிலையில் இந்த பேட்டி தமிழக அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் திமுக அமைச்சரவையில் மாற்றம் வரும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அதில் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் நிதி துறை வேறு ஒருவருக்கு மாறலாம் என தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியும் தன்னை திருத்தி கொள்ளாமல், திமுக அரசையும் முதல்வரையும் பல சிக்கலில் சிக்க வைத்து வருகிறார், சமீபத்தில் ஜக்டோ ஜியோ குறித்து PTR பேசியது திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே பழனிவேல் தியாகராஜன் மீது அதிருப்தியில் முதல்வர் முக ஸ்டாலின் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் நிதித்துறை PTR பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து பறிபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறபடுகிறது.
ஏற்கனவே தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக்கழகம், டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸின் ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.நாராயணன் ஆகியோரை நியமித்து நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டம்மியாக்கியது குறிப்பிடத்தக்கது.