நாளை வெளியாகிறதா ‘வலிமை’ டீசர்? பரபரப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

0
Follow on Google News

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் ‘வலிமை’. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடைபெற்று முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நாளை வெளியிடப்போவதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ValimaiGlimpse? என்ற ஹேஸ்டேக் தற்போது டுவிட்டரையே கதிகலங்க வைத்து வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும், ‘வலிமை’ படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் நாளை படத்தின் டீசர் வெளியாகும் என்றே தெரிவிக்கின்றன.

‘வலிமை’ படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஹீமா குரோஷி நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.