முதல்வர் சொந்த தொகுதியில் நடக்கும் கீழ்த்தரமான அரசியல்.. !ஆதாரத்துடன் புகைப்படம் வெளியிட்டு தரமான சம்பவம் செய்த அண்ணாமலை..!

0
Follow on Google News

சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்த தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணிவரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிடும் செய்திகள் வெளியாகி வருகிறது. சில இடங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளால் முதல்வர் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக கடந்து செல்கிறார்.

இளைஞர் ஒருவர், இது தான் விடியல் ஆட்சியை என கேட்கும் வீடியோவும், மேலும் முதல்வர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் போது. ஒரு பெண் எங்களுக்கு சாப்பாடு வேண்டாம் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில புகைப்படங்களை வெளியிட்டு மழை வெள்ளம் குறித்து தெரிவித்துள்ளதாவது.

‘திராவிட வளர்ச்சித் திட்டம்’ என்ற பொய்யான பிம்பத்தை ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பார்வையிட வேண்டும். முதலமைச்சர் தொகுதிக்குள் வரும்போது பொதுமக்களின் வீட்டிற்கு வெளியே கயிறு கட்டி அவர்களை வெளியே வரவிடாமல் தடுப்பது, Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது என்று கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.

இதில் கொடுமை என்னவென்றால் அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார். அப்படியெனில் அவர் அந்தப் பதவிகளில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

வெற்று அறிவிப்புகளும் செயல்படுத்தாத வாக்குறுதிகளும் தான் திமுகவின் வளர்ச்சித் திட்டம் போல என தமிழக பாஜக தலைவர் முதல்வர் மழை வெள்ளத்தை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , மற்றும் Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை சுட்டிக்காட்டி தரமான சம்பவம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யா வைகோ ஆளை காணோம்…..அண்ணன் திருமா ஓடி போனார்……காங்கிரஸ் கட்சி பல்லுல சுளுக்கு…..கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு….