உடலில் குறைந்தது 6 கிலோ வரை தங்க நகைகளை அணிந்து உலா வருகின்றவர் ஹரி நாடார், இவரை நடமாடும் நகை கடை என்றே அழைப்பார்கள், பனங்காட்டு நரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஹரி நாடார், நாடார் சமூக இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறார், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாவது இடம் பிடித்து அங்கே போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நாடார் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுடன் தென்படும் ஹரி நாடார் ஒரு குண்டு தங்கம் கூட இல்லாமல் காணப்பட்டவர், குறுகிய காலத்தில் கிலோ கணக்கில் தங்கத்துடன் உலா வருவதற்கு எப்படி இவருக்கு பணம் வந்தது என பலர் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள், முதலில் நாடார் சமூகத்தை சேர்ந்த அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார் ஹரி நாடார்.
இதன் பின்பு தனது அரசியல் பின்புலத்தை வைத்து, கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார், மேலும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது, பெங்களூரை சேர்ந்த வெங்கட்ரமணி என்பவரிடம் 370 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 7.20 கோடி மோசடி செய்த வழக்கில் பெங்களூர் காவல்துறையினர் ஹரி நாடாரை கேரளாவில் வைத்து கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர்.
வெங்கட்ரமணி என்பவரிடம் 370 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, சுமார் 7.20 கோடி கமிஷன் தொகையாக முன்பே பெற்றுள்ளார், ஆனால் கடன் தொகையை பெற்று தரவில்லை இதன் பின்பு தொடர்ந்து ஹரி நாடாரை தொடர்பு கொண்டு வெங்கட்ரமணி கேட்ட போது முறையான பதில் இல்லை, இதனை தொடர்ந்து ஹரி நாடார் மீது வெங்கட்ரமணி புகார் தெரிவித்ததை தொடர்ந்து பெங்களூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என கூறபடுகிறது, ஹரி நாடார் பின்னனால் இருந்து கடன் கொடுக்கும் அந்த முக்கிய புள்ளிகள் யார், கணக்கில் வராத அரசியல் தலைவர்களின் கருப்பு பணத்தை வட்டிக்கு கொடுத்து உதவி வருகிறாரா ஹரி நாடார், என்பது போன்ற தகவல் விசாரணையின் போது வெளிவரும் என கூறபடுகிறது.