தனுஷ் நடிப்பில் 17 மொழியில் வெளியாகும் ஜகமே தந்திரம்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நீண்ட நாள் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படம் கச்சிதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் 17 மொழியில் வெளியிட உள்ளனர். தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் கலையரசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.இந்த திரைப்படங்கள் 2020 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியது. ஆனால் பல
காரணங்களால் ஓடிடி-யில் வெளியாகாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. நடிகர் தனுஷ் தொடர்ந்து அசுரன், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால், ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் மவுஸ் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் மிகப்பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் தளம் ஜகமே தந்திரம் திரைப்படத்தை 50கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.