திமுக கட்சி சார்பில் நடந்த, 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி என்ற ஒரே இலக்குடன் கட்சி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கோட்டையை பிடித்து விடலாம் என்று பேராசையோடு காத்திருப்பவர்களின் ஆசையை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது திமுக தொண்டர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
ஆன்மீகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று சிலர் நினைப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டி பேசிய ஸ்டாலின், ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக என்று கூறினார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் ஆனமீகம் குறித்து பேசியதற்கு பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைகளுக்கு என்றாவது வாழ்த்து தெரிவித்தது உண்டா? அதற்கு மட்டும் ஒரு விவாதம் நடத்த ஸ்டாலினுக்குத் திராணி உண்டா?நான் வருகிறேன். உங்கள் மகன் உதய நிதி ஆரம்பித்து உங்கள் அறிவு ஜீவி வாழும் நியூட்டன் ஆண்டிமுத்து ராசா வரை எவருடனும் விவாதம் செய்ய நான் தயார். உங்கள் கீழ்த்தரமான மததுவேச அரசியலை. ஆக அனைத்து மத நம்பிக்கையையும் மதிப்பளிப்பவர் பேசலாம் நீங்கள் பேச என்ன தகுதி உள்ளது ஸ்டாலின்.
கறுப்பர் கூட்டத்தை அதன் பின்னால் திமுக நிர்வாகிகள் , இந்துக்களை அவமானப்படுத்தி அதில் சிறுபான்மையினர் வாக்கு கணக்கு என்ற கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என்ற உண்மை மக்கள் உணர்ந்துள்ளனர். மக்கள் ஒற்றுமையாக உள்ளனர், அதில் மத மோதலை உருவாக்குவது திமுகவின் கீழ்த்தரமான ஜாதி மத துவேச அரசியல் தான். கூடிய விரைவில் திமுக வீழ்த்தப்படும் அதற்குக் காரணம் ஒன்று ஆன்மீகவாதி ரஜினி. இன்னொரு காரணம் உதயநிதி திமிர் பேச்சு என மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.