வலியே இல்லை இதன் கொரோனா தடுப்பூசியா? பிரதமர் மோடி உற்சாகம்…!

0
Follow on Google News

கொரோனா என்ற தொற்று நோயால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பல கோடி உயிர்கள் பலியாகின. கடந்த ஆண்டு 2020, டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா. ஜனவரி முதல் அனைவருக்கும் தடுப்பூசி ஊசி கொண்டு சேர்க்கும் பணியில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டது. முதலாம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் போன்ற பலரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல நாடுகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்த நாட்டின் அதிபர் தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்.

பல நாடுகளில் உள்ள அதிபர்கள் இதனைக் கடைபிடிக்கும் போது இந்தியாவில் மட்டும் பிரதமர் மோடி ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை? என்ற கேள்வி எதிர்க்கட்சிகளிடம், பத்திரிக்கை துறையிடம் மற்றும் பொது மக்களிடம் கேள்விகள் எழத் தொடங்கியது. இந்தகேள்விக்கு பாஜக தலைவர்கள் பதிலளித்துள்ளனர். காங். கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.

ஆனால் நாங்கள் முன்களப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கின்றேம். 45 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு மற்றும் இரத்த குழாய் நோயாளிகளுக்கும் இன்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அப்போது திடீரென்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி போடும் நர்ஸிடம் இதுதான் கொரோனா தடுப்பூசியா..! வழியே இல்லை என்று உற்சாகமாக கூறினார்.