பத்து நாட்களில் இதை செய்ய வேண்டும்.. இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா.? திமுக அரசுக்கு கெடு விதித்த அண்ணாமலை..

0
Follow on Google News

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களை திறப்பதற்கு பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை 10நாட்கள் கோயில்களை திறக்க கெடு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் கொரோனாவை பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் பிரசித்தி பெற்ற முக்கிய கோயில்கள் முன்பு நேற்று பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்ற துறைமுக தொகுதியில் உள்ள காளிகாம்பாள் முன்பு பேராட்டத்தை துவங்கினார். அங்கு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு கார்ப்பரேட் க்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதனால் திரையரங்கு மால்களைத் திறக்கும் அரசு கோயில்களை மட்டும் கொரோனா காரணத்தைச் சொல்லி மூடுவதாக குற்றம்சாட்டினார்.

தமிழக அரசுக்கு 10 நாட்களுக்குள் கோயிலைத் திறக்க வில்லை என்றால் தமிழகத்தில் உள்ள நான்கு லட்சம் கோயில்கள் முன்பு ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து ஆளும் அரசை கதிகலங்க வைத்து விடுவதாக எச்சரித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களை தனி விமானம் மூலம் திருச்செந்தூர் கோயில்களுக்கு விஐபி தரிசனம் வசதிகள் செய்து கொடுத்து நினைத்த நேரத்தில் தரிசனம் செய்ய வைக்கிறார்.

ஆனால் நம்மால் நினைத்த நேரத்தில் தரிசனம் செய்ய முடியாது. அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சரா அல்லது முதலமைச்சரின் கிச்சன் கேபினட் அமைச்சரா என்று பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசையும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அனைத்து நாடுகளிலும் கோயில்களை திறக்க 10 நாட்கள் பத்து நாட்கள் கெடு விடுத்துள்ளார்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…