கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமானவர்களிடம் இருந்து அவர்களின் இரத்த பிளாஸ்மா செல்களை எடுத்து தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை உலக சுகாதார அமைப்புதான் முன்பு பரிந்துரை செய்தது.
ஆனால் இப்போது பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் பிளாஸ்மா சிகிச்சையில் பலன்கள் கிடைப்பதற்கான தரவுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களிடம் நடத்திய ஆய்விலும் சிகிச்சையால் அவர்கள் உடல்நலம் முன்னேறியதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.