திமுகவில் இருக்கும் 90 சதவிகிதம் இந்துக்கள் சிந்திப்பார்களா.? இந்த வருடமும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

0
Follow on Google News

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மிக விமர்சனமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி திருநாள். இன்று உலகம் முளுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், திமுகவும் தனது நடவடிக்கை சிலவற்றை மாற்றி வருகிறது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியின் காரணமாக இதுவரை இல்லாத இந்துக்கள் வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகி வருவது ஆய்வு அறிக்கைகள் தெரியப்படுத்துகிறது.

இந்நிலையில் வரும் தேர்தலில் இந்துக்களில் வாக்கு வங்கி மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்க படும் நிலையில், திமுக சமீப காலமாக இந்து எதிர்ப்பை சற்று குறைத்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் தீபாவளி திருநாள் அன்று விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என்று தான் குறிப்பிடப்பட்டு வந்தது, ஆனால் இந்த வருடம் தீப ஒளி திருநாள் சிறப்பு நிகழ்ச்சி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாற்றத்துக்கு பின்னணியில் இந்துக்களின் விழிப்புணர்வு தான் காரணம் என கூறபடுகிறது. இந்நிலையில் இந்து எதிர்ப்பு அரசியல் இனி தமிழக்தில் ஈடுபடாது என உணர்ந்த திமுக தலைமை தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு வருவதாக கூறப்பட்டாலும், தீபாவளி திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் இல்லை.

இதனை தொடர்ந்து மாற்று கட்சியினர் திமுகவில் இருக்கும் பெருபான்மையான இந்துக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், மாற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்ல தயங்குவது ஏன் என்று உங்க கட்சி தலைவரிடம் கேள்வி கேட்க திராணியில்லாதவர்கள் தான் திமுகவில் இருக்கும் இந்துக்கள் என கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.