திமுக செய்தி தொடர்பாளராக இருந்து வருகின்றவர் தமிழன் பிரசன்னா, 2017 மற்றும் 2018 கால கட்டத்தில் எதிர்மறை விமர்சனகளால் பிரபலமானவர் இவர். ஊடக விவாதங்கள் மூலம் பொது வெளியில் அறிமுகமான பிரசன்னா, தன்னை ஒரு பகுத்தறிவாதி என காட்டி கொண்டு ஒரு குறிப்பிட்ட பெரும்பாண்மை மதத்துக்கு எதிராக இவர் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து இவருக்கு எதிராக கடும் விமர்சனகள் மற்றும் கண்டனங்கள் வர தொடங்கியது.
எதிர்கட்சி அரசியல் தலைவர்களை அநாகரிகமாக விமர்சனம் செய்து எதிர்ப்பை பெற்று எதிர் மறை விமர்சனம் மூலம் பிரபலமான பிரசன்னா திமுக முக்கிய மேடைகளில் இடம் பிடித்து முக ஸ்டாலின் மேடையில் இருக்கும் அதே மேடையில் பிரதமர் மோடியை அயோக்கியன், திருடன் என அநாகரிக்கமாக பேசியது பெரும் சர்ச்சையானது, ஆண்டாள் குறித்த சர்ச்சையில் வைரமுத்து சிக்கிய போது அவருக்கு ஆதரவு தருவதாக வீடியோ வெளியிட்டு ஆண்டாள் குறித்து அநாகரிகமாக பிரசன்னா பேசியது மேலும் சர்ச்சையானது.
இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த பிரசன்னா திமுகவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதை உணர்ந்து அவரை ஓரம் கட்ட தொடங்கியது திமுக தலைமை , இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழன் பிரசன்னா திமுக முக்கிய நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டார், 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தும் அவரை நேர்முக தேர்வுக்கு கூட அழைக்காமல் புறக்கணித்தது திமுக தலைமை.
இதே போன்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு முயற்சித்த பிரசன்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, மேலும் செய்தி தொடர்பாளராக இருந்த பிரசன்னாவுக்கு போட்டியாக சமீபத்தில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இனைந்த ராஜிவ் காந்திக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும், மேலும் பிரசன்னாவுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் பல ராஜிவ் காந்திக்கு சென்று கொண்டிருப்பது பிரசன்னாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் திமுக முக்கிய தலைவர் ஒருவரை சந்தித்த பிரசன்னா, அவர் சிறு வயதில் திமுக தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காண்பித்து சிறு வயதில் இருந்து திமுகவில் பாடுபட்டு வருகிறேன், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கவில்லை, பொது இடங்களில் எனக்கு மரியாதையும் தற்போது இல்லை நீங்க தான் தலைவரிடம் சொல்லி எனக்கு கட்சியில் முக்கிய பதவி வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த முக்கிய தலைவர், தலைவரிடம் பேசும் அளவுக்கு உன்னுடைய விவகாரம் முக்கிய விஷயம் கிடையாது, உன் மேல் ஏகப்பட்ட புகார். நல்ல வளர்ந்து வரும்போது, மைக் கிடைக்குதுனு உன் இஷ்டத்துக்கு பேசி இப்ப என்னாச்சு பார், உன் வாயை குறைத்து அளவோடு பேசு உனக்கு மரியாதை கிடைக்கும் இது மாதிரி பழைய புகைப்படத்தை காண்பித்து பதவி கேட்பதை இத்துடன் நிறுத்திட்டு வாயை கட்டுப்படுத்தி இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்க முயற்சி செய் என கடுமையாக அந்த முக்கிய தலைவர் பேசி அங்கிருந்து தமிழன் பிரசன்னாவை விரட்டியுள்ளார் என கூறபடுகிறது.